மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – தீபாவளிக்கு முன் சர்ப்ரைஸ்

Centre Govt Tax Devolution: மாநில அரசுகளுக்கான தனது வரி பகிர்வை தீபாவளி பண்டிகைக்கு முன் மத்திய அரசு நேற்று (அக். 1) விடுவித்தது. அந்த வகையில், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதை இங்கு காணலாம்.

இத்தனை நன்மைகள் செய்யுமா நீவுதல் சிகிச்சை? விளக்கும் இயற்கை மருத்துவர்!

’’வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நீவுதல் சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது. மெசபடோமியர்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தியிருக்கின்றனர். கிரேக்க நாட்டிலும் இந்தச் சிகிச்சை முறை பிரதானமாக இருந்துள்ளது. உடல் சோர்வைப் போக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, பிற்காலத்தில் மூட்டு மற்றும் தசைகளைப் பலப்படுத்தப் பயன்பட்டது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் நீவுதல் சிகிச்சை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன. இன்று உலகம் முழுவதும் 100 விதமான நீவுதல் சிகிச்சைகள் … Read more

திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரிப்பு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு? 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023-இல் 15% அதிகரித்துள்ளது … Read more

அதிபர் புதினை பிரதமர் மோடி வற்புறுத்தியதாக நேட்டோ தலைவர் கூறுவது தவறு: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: “இந்​தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்​யாவை மறை​முக​மாக பாதிக்​கிறது. உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார்” என நேட்டோ பொதுச் செயலா​ளர் மார்க் ரூட் கூறி​யிருந்​தார். இதுகுறித்து, வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் கூறி​யிருப்​ப​தாவது: உக்​ரைன் விவ​காரத்​தில் தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்​புறுத்​தி​னார் என நேட்டோ பொதுச் செய​லா​ளர் மார்க் ரூட் கூறியது … Read more

தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்

விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “சீனா பேச்சுவார்த்தை காரணங்களுக்காக மட்டுமே நம்மிடமிருந்து சோயாபீன்ஸ் வாங்காமல் இருப்பதால், நம் நாட்டின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வரிகளின் மூலம் நாம் நிறைய பணம் சம்பாதித்துள்ளோம். அந்தப் பணத்தில் ஒரு சிறிய பகுதியை கொண்டு நம் விவசாயிகளுக்கு உதவப் போகிறோம். நான் ஒருபோதும் நம் … Read more

ஐரோப்பிய பெண்ணை மோசடி, பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் சிறை, தாயாருக்கும் தண்டனை

மதுரா, உத்தர பிரதேசத்தின் மதுரா நகரின் கோவிந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரேந்திரா குமார். இவருக்கு திருமணம் முடிந்து மம்தா ராகவ் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஹரேந்திராவுக்கு எதிராக 2018-ம் ஆண்டு பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். அதில், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பல லட்சம் பணமும் மோசடி செய்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது. ஹாலந்து நாட்டை சேர்ந்த … Read more

புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

சென்னை, 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – யு … Read more

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்.. துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்த வன்முறை போராட்டங்களின்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால், அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன, அத்துடன் … Read more

அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை: கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை எனும் விதமாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் நெரிசலினால் 41 பேர் உயிரிழந்ததோடு, அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துயர நிகழ்வு குறித்து அறிந்தவுடன் … Read more