மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல்… மதுபோதை ஆசாமியின் எச்சரிக்கையால் பரபரப்பு

புனே, மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட கூடும் என மர்ம நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதுபற்றி விசாரணை செய்ததில், அந்த நபர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து பேசியதும், யாரோ ஒருவர் அவருக்கு இந்த தகவலை கூறியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அவருடைய பெயர் ஜஹாங்கீர் என்பதும், மதுபோதையில் நண்பருடன் இருந்தபோது, … Read more

கெய்க்வாட் அரைசதம்.. தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா ஏ

ராஜ்கோட், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியா ஏ-க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் … Read more

உலக ஏழைகள் தினம் – போப் லியோ சிறப்பு பிரார்த்தனை

ரோம், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ‘நற்செய்தியின் மையக்கருவாக வறுமை உள்ளது’ என்பதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதியை உலக ஏழைகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு போப் பிரான்சிஸ் அறிவித்தார். அதன்படி இன்று ‘உலக ஏழைகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலக ஏழைகள் தினத்திற்கான கருப்பொருள், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் வரும் “ஆண்டவரே, நீரே எனது நம்பிக்கை”(சங்கீதம் 71:5) என்ற வசனமாகும். இந்த நிலையில் … Read more

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் 

சென்னை: பூர்த்தி செய்த எஸ்​ஐஆர் படிவங்​களை சேகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள், அப்​படிவங்​கள் வாக்​காளர் பட்​டியலுடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறு​தி​ மொழி அளிக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணைய உத்​தர​வின்​படி தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இதன் ஒருபகு​தி​யாக தமிழகத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​காளர்​களுக்கு … Read more

பிஹாரில் 25 அமைச்சர்களில் 24 பேர் மீண்டும் அமோக வெற்றி

பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். வேளாண் அமைச்சர் பிரேம்குமார், கயா தொகுதியிலிருந்து … Read more

அடுத்த டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாட மாட்டார்? அவருக்கு பதில் இந்த வீரர்தான்!

Shubman Gill Injury Update: டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (நவம்பர் 14) தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்த நிலையில், 159 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை … Read more

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் சினெர் – அல்காரஸ் பலப்பரீட்சை

துரின், முன்னணி 8 வீரர்கள் இடையிலான ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் ஜானிக் சினெர் (இத்தாலி) – அல்காரஸ் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்த உள்ளனர். Two giants of our sport ⭐️⭐️@carlosalcaraz vs. @janniksin — PART XVI #NittoATPFinals pic.twitter.com/EW40hQhGbr — ATP Tour (@atptour) November 15, … Read more

ஜப்பானுக்கு சென்று படிப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் – மாணவர்களிடம் அறிவுறுத்திய சீனா

பீஜிங், ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், பிரதமராக பதவியேற்ற பிறகு தைவான் விவகாரம் குறித்து சனே தகைச்சி தெரிவித்த சில கருத்துகள் சீனா-ஜப்பான் இடையிலான உறவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7-ந்தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய சனே தகைச்சி, “தைவான் மீதான சீனா ஆயுதமேந்திய … Read more

“ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது" – 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது. Oxford Union Society நவம்பர் … Read more