விஜய் மக்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும்: தவெக துணை பொதுச் செயலாளர் தகவல்

திருச்சி: “விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்க உள்ளது. அனைத்து அணிகளையும் வலுப்படுத்தி, வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் சந்திப்பு நடக்கும்” என்று தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் … Read more

அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்புதான்: ஆர்ஜேடி தகவல்

பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 இடங்களில் … Read more

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஏக்கருக்கு ரூ.37,000 பெறுவது ஈஸி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Extended Deadline For Crop Insurance : தமிழகத்தல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் காப்பீடு தொகை ஈஸியாக பெற முடியும்.  

சைலண்டாக சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! இப்போதே பிளேயிங் 11 ரெடி!

ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழுமையான பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு, மும்பை அணி எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த அந்த அணி, 2025ம் ஆண்டில் குவாலிஃபையர் 2 வரை முன்னேறியது. இந்த நிலையில், வரவிருக்கும் சீசனுக்காக அணியில் … Read more

டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அதிர்ச்சி

மதுரா, ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து பேசிய அந்நபர், ரெயிலின் பொது பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இதுபற்றி ரெயில்வே நிலைய இயக்குநர் என்.பி. சிங் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. இதன்பின்னர், மதுரா ஜங்சனுக்கு ரெயில் வந்ததும் … Read more

இது போன்ற பிட்ச்சில் சச்சின், விராட் கோலியால் கூட… – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் ரன் குவிக்க முடியாமல் திணறின. முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 159 ரன்களும், … Read more

போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

கீவ், உக்ரைன் நாட்டுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் … Read more

Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக இணையத்தில் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். Gautam Gambhir – கவுதம் கம்பீர் முதல் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (நவம்பர் 16) இந்திய அணி 125 ரன்கள் இலக்கைத் துரத்த முடியாமல் தோல்வி அடைந்ததால் 1-0 என தொடரில் பின் தங்கியிருக்கிறது. கொல்கத்தாவின் சர்ச்சைக்குரிய பிட்சில் … Read more

எஸ்ஐஆர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கலை சரி செய்ய வலியுறுத்தல்!

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை துவங்கி உள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு படிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களிலும் படிவங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “திருப்பூரில் தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். … Read more

டெல்லி குண்டு வெடிப்​பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோ​ருக்கு ஐஎம்​ஆர், தேசிய மருத்​து​வப் பதி​வாளர் (என்​எம்​ஆர்) ஆகியோர் வழங்​கிய அங்​கீ​காரத்தை எம்​எம்சி உடனடி​யாக ரத்து செய்து நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.இந்த மருத்​து​வர்​கள் இந்​தி​யா​வின் எந்​தப் பகு​தி​யிலும் மருத்​து​வ​ராகப் பணி​யாற்ற முடி​யாது என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது. Source link