11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. இதுதொடர்​பாக திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலம் தாலுகா முடி​கொண்​டானைச் சேர்ந்த என்​.ராஜசேகரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனு: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ராம​நாத​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வள்​ளூர், அரியலூர், நாகப்​பட்​டினம், விருதுநகர், திருப்​பூர், கிருஷ்ணகிரி, நீல​கிரி, நாமக்​கல், திண்​டுக்​கல் … Read more

தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்

புதுடெல்லி: தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு – காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது திடீரென வெடித்ததில் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. ஜம்மு – காஷ்மீரில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து புன்போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில் கடந்த அக்டோபர் மாத மத்தியில் … Read more

தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்று மாலை வரை நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்றுமாலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது,  தமிழக சிறப்புக் கலந்தாய்வு  மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் 16-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, முடிவுகள் நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, நவம்பர் 20-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இந்த சிறப்பு கலந்தாய்வு, நீலகிரி … Read more

பயங்கரவாத ஊடுருவலை தடுப்பது குறித்து கங்கையில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை

லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது, வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினர். இதில் கங்கை நதி வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், அவர்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பான ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து … Read more

ஐ.பி.எல்.2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை, 19-வது ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்காக தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் விவரத்தை இன்று ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி 10 அணிகளும் அறிவித்துவிட்டன. முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். சீசனில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதில் சென்னை அணியின் கேப்டனா ருதுராஜ் … Read more

ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம் – மழை வேண்டி தலைநகரில் சிறப்பு தொழுகை

தெஹ்ரான், ஈரான் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சி நிலவி வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் ஈரானில் தற்போது வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை வேண்டி ஈரான் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரசித்தி பெற்ற சலே மசூதியில் நடைபெற்ற இந்த … Read more

“நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது” – உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “2026 தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுர ஆகிய 2 மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அடிமை கட்சி அதிமுக, பாசிச பாஜகவை வீழ்த்தி 2-வது முறையாக … Read more

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ – 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது. ஆனால் ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை (தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாநில முதல்வர் பதவி) சமன் செய்து ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார். 10-வது முறையாக முதல்வர் பதவி! – முதன்முதலில் இவர் மார்ச் … Read more

ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..

5th Standard Student Harassed : பள்ளியின் கழிவறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த காலை உணவு திட்ட ஊழியர் கைது

மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: மேகதாது அணை  கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி  வழங்கி இருப்பது, தமிழக விவசாயி களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது., இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர்  வெளியிட்டுள்ள … Read more