பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்றி குறித்து பாஜக​வின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​காஷ் பாஸ்​வான் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: லாலு பிர​சாத் ஆட்​சிக் காலத்​தில் பிஹாரின் ஜெகா​னா​பாத்​தில் தின​மும் படு​கொலைகள் அரங்​கேறின. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு ஜெகா​னா​பாத் தற்​போது அமைதி பூங்​கா​வாக மாறி​யிருக்​கிறது. இங்கு கோகு தொகு​தி​யில் வாக்கு சேகரித்து கொண்​டிருந்​தோம். அப்​போது குந்​திதேவி பாஸ்​வான் என்ற மூதாட்டி எங்​களை வழிமறித்து நிறுத்​தி​னார். ‘துப்​பாக்​கி​யால் சுட்டு … Read more

IPL: இன்று கழட்டிவிடப்படும் வீரர்கள் யார் யார்…? 10 அணிகளின் லிஸ்ட் இதோ!

IPL 2026 Releasing Players List: ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மினி ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட இருக்கின்றன. Add Zee News as a Preferred Source IPL Retention 2026: எத்தனை … Read more

லைகா – விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஜெயச்சந்திரன், மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய மருத்​து​வர் உமர் நபி​யின் வீடு இடித்து தரை மட்​ட​மாக்​கப்​பட்​டது. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். விசா​ரணை​யில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய​வர் ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி என்​பது … Read more

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நாம் எங்கு … Read more

‘பரகாமணி' திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

திருப்பதி: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் உண்​டியல் மூலம் செலுத்​தும் பணத்தை எண்​ணும் இடத்தை ‘பர​காமணி’ என்​றழைக்​கின்​றனர். தீவிர சோதனை, கண்​காணிப்பு கேம​ராக்​கள் போன்ற கெடு​பிடிகள் இருந்​தா​லும், தேவஸ்​தான சீனியர் அஸிஸ்​டெண்​டாக பணிபுரிந்து வந்த ரவிக்​ கு​மார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​நாட்டு கரன்​ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்​டிருந்​த​போது, அங்கு பாது​காப்பு பணியி​லிருந்த திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவு​மாக பிடித்​தார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் … Read more

‘பிஹார் சதி தமிழகத்தில் எடுபடாது; மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம்’ – அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சாவூர்: பிஹாரின் சதி தமிழகத்தில் எடுபடாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ராமலிங்கம் வரவேற்றார். முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், நகர்புற மற்றும் நீர்வளங்கள் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்து கூறியதாவது: வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியல் பணி நடைபெறுவதால், இந்த நேரம் மிகவும் கடுமையான நேரம். மக்களுக்கு … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழக, கேரள மாநில பாஜகவுக்கு புது சக்தி: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று இரவு பிஹார் தேர்​தல் வெற்றி விழா கொண்​டாடப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்​கேற்​றார். அவர் பேசி​ய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி மாபெரும் வெற்​றியை பெற்​றிருக்​கிறது. ஒட்​டுமொத்த தேசத்​தின் பார்​வை​யும் பிஹார் மக்​கள் மீது திரும்​பி​யிருக்​கிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பொது​மக்​கள் பெருந்​திரளாக திரண்டு வந்து வாக்​களித்​தனர். வளர்ச்​சிக்கு ஆதர​வாக பிஹார் மக்​கள் வாக்​களித்து உள்​ளனர். முந்​தைய தேர்​தல் வரலாற்று சாதனை​கள் தற்​போது … Read more

பீகார் வாக்கு எண்ணிக்கை 12மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை

பாட்னா:  பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மதியம்  12மணி நிலவரப்படி,  பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமகா என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என  நம்பப்படுகிறது. மகாகத்பந்தன் 46 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது ராகுல்காந்திக்கு … Read more

பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ, பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். … Read more