பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் … Read more

டி20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி

வெல்லிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் . டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.கேன் வில்லியம்சனின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர் கூறியதாவது … Read more

BB Tamil 9 Day 27: வாட்டர் மெலனை பிழிந்தெடுத்த விசே; ரெண்டு எவிக்‌ஷனா?

மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது விதிவிலக்கு ஆச்சரியமாக பாராட்டைப் பெற்றவர் வியன்னா மட்டுமே.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 27 “ஏன் போட்டியாளர்கள் இப்படி மோசமா நடந்துக்கறாங்க?” – இதுதான் பெரும்பான்மையான பார்வையாளர்களின் எரிச்சலுடன் கூடிய கேள்வி. இந்த நோக்கில்தான் நானும் கூட … Read more

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி சம்பத்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக தோனி, கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

லாலுவின் ஹாலோவீன் கொண்டாட்டம்: பாஜக கடும் விமர்சனம்

புதுடெல்லி: ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. உ.பி.யில் நடந்த மகா கும்பமேளா நிகழ்வை ‘அர்த்தமற்றது’ என்று லாலு விமர்சித்ததை சுட்டிக்காட்டி லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தை சாடியுள்ளது பாஜக. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 என இரு தினங்களில் நடக்கவிருக்கும் சூழலில் லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டமும், பாஜகவின் விமர்சனமும் கவனம் பெற்றுள்ளது. லாலு யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா, தனது பிள்ளைகள் … Read more

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10 பேர் காயம் – இருவர் கைது

புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. … Read more

60 வயதாகும் நடிகர் ஷாருக்கான்… பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், முழு விவரம் இதோ

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பாட்ஷா என்று அழைக்கபடும் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது மொத்த சொத்து மதிப்பின் விவரம் வெளியாகியுள்ளது. 

தமிழில் எழுத, படிக்க தெரிஞ்சா போதும்.. மாதம் ரூ.50,000 வரை சம்பளம்… மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Jobs: தமிழக மீன்வளத்துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 

தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி, தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய்த்தொல்லை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் இந்திரா, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் 72 விலங்குகள் காப்பகங்கள் 22 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டு உள்ளது. … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னெர் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : பாரீஸ் மாஸ்டர்ஸ் … Read more