மகளிர் உலக கோப்பை வெற்றி! ஒவ்வொரு வீரருக்கு கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு?

நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக மாறியுள்ளது. நவிமும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, இந்திய அணி மீது பண மழை பொழிந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நிறுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடந்த அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும் விடு​ப​டா​மல் சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்​ட​வர்​களின் பெயர்​களை கண்​டறிந்து நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்​தி​யா​வில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் … Read more

‘இவன் என் பழைய நண்பன்’ – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

அமராவதி: ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (ஒருங்கிணைந்த ஆந்திரா) தனக்கு சொந்தமான அம்பாஸிடர் காரில்தான் (பதிவு எண் AP 09 G 393) பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த காரை அவர் இப்போது பயன்படுத்துவதில்லை. அவருடைய ஹைதராபாத் வீட்டில் உள்ள அந்தக் காரை நன்கு பராமரித்து வந்தனர். தற்போது மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில், அமராவதியில் குடியேறினார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், அந்த அம்பாஸிடர் கார் … Read more

Amol Muzumdar: இந்தியாவுக்காக விளையாடியதில்லை; இன்று பயிற்சியாளராக கோப்பை வென்ற பேசப்படாத ஹீரோ!

இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியை வென்றதன்மூலம் முதல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளனர். Amol Muzumdar 50 வயதாகும் முஜும்தார் மும்பையில் பிறந்த கிரிக்கெட்டர். உள்நாட்டு போட்டிகளில் பெயர்பெற்ற இவர், துரதிர்ஷ்டவசமாக நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை ஒருமுறைகூட பெறவில்லை. இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி, வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, இவரின் கனவும் கூட! கடந்த அக்டோபர் 2023ம் ஆண்டு பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்றார். தனது நிதானமான குணத்தால் அணியை நிலைப்படுத்தினார். … Read more

அதிக எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்​துள்​ளது. அதிகஎடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை பிற நாடு​களின் உதவி கொண்டு விண்​னுக்கு அனுப்ப வேண்​டிய நிலையில் இஸ்ரோ இருந்​தது. அதனால் செல​வீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்​டது. இதையடுத்து அனைத்து ராக்​கெட்​களின் உந்து​விசைகளை அதி​கரிக்​கும் பணி​களை இஸ்ரோ முன்​னெடுத்​தது. அதன்​பல​னாக … Read more

டெல்லிக்கு இந்திரபிரஸ்தம் பெயர் பாஜக எம்.பி. வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியின் சாந்தினி சவுக் மக்களவை தொகுதி எம்.பி. பிரவீன் கண்டல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல. அது இந்திய நாகரிகத்தின் உயிருள்ள சின்னமாகவும் யமுனை நதிக்கரையில் பாண்டவர்கள் நிறுவிய இந்திரபிரஸ்த நகரின் சிறப்புமிக்க பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. மகாபாரத காலத்தில் மிகவும் செழிப்பான, அழகான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது. நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்க பிரதமர் நரேந்திர … Read more

'நல்லதோ கெட்டதோ, எல்லாரும் ஒன்னா நிற்போம்!' – வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Team India ஸ்மிருதி மந்தனா பேசியதாவது, ‘எப்படி என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என தெரியவில்லை. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் எங்களுக்கு நிறைய ஏமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ‘தலைமுறைகளின் கனவு வெற்றி!’ – உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகுடம் … Read more

அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம் 

சென்னை: அனைத்​துக் கட்சி கூட்​டம் மக்​களை திசை திருப்​பும் நாடகம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் ​கூட்​டத்தைக் கூட்​டாத முதல்​வர் ஸ்​டா​லின், தற்​போது மட்​டும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் பற்​றிய கூட்​டத்தை நடத்​து​வ​தில் இருந்தே தெரி​கிறது இது மக்​களை மடை​மாற்ற நடத்​தப்​படும் மற்​றுமொரு திசை​திருப்பு நாடகம் என்​று. பல்​லாண்​டு​காலமாகத் தொடர்ந்து நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர … Read more

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ தளபதி திவிவேதி விளக்கம்

ரேவா: மத்​தி​யப் பிரதேசம் ரேவா​வில் தான் படித்த சைனிக் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவிவேதி கலந்து கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்போது தீவிர​வா​தி​கள் இருந்த இடங்​களை மட்​டுமே நாங்​கள் தாக்​கினோம். பொது மக்​கள் மற்​றும் ராணுவ மையங்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​த​வில்​லை. அதே​போல் தொழுகை நடை​பெறும் நேரத்​தி​லும் ராணுவம் தாக்​குதல் நடத்​த​வில்​லை. எங்​கள் இலக்​கு​களை ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் அடைந்​தோம். இவ்​வாறு தி​விவே​தி கூறி​னார்​. Source … Read more

'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' – உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் அவரது வீராங்கனைகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Team India அமோல் மஜூம்தார் பேசியதாவது, ‘இந்த அணியை நினைத்து அவ்வளவு பெருமையாக இருக்கிறது. இது ஒரு அசாத்தியமான சாதனை. இந்த வெற்றிக்காக இந்த வீராங்கனைகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி. இடையில் எங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களை தோல்விகளாக பார்க்கவில்லை. … Read more