டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகள் 4 பேரின் காவல் விசாரணை மேலும் 10 நாள் நீட்டிப்பு

புதுடெல்லி, டெல்லியில் கடந்த 10-ந்தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் டாக்டர்கள் முசாமில் ஷகீல், அதீல் அகமது ராதர், ஷாகீன், சயீத், முப்தோ இர்பான் அகமது வாகே ஆகிய 4 பேரும் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி 2வது வெற்றி

சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இதில் மதுரையில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் … Read more

வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம்; விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி … Read more

'பதவி போச்சு தலைவரே… மனசு கஷ்டமா இருக்கு' – ஸ்டாலினிடம் குமுறிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் செல்போனில் பேசி வருகிறார். கோவை மாவட்டம், காரமடை நகர செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட வெங்கடேஷிடம் ஸ்டாலின் செல்போனில் பேசினார். அப்போது வெங்கடேஷ் தன் புலம்பல்களை குமுறி கொட்டிவிட்டார். வெங்கடேஷ், “வணக்கம் தலைவரே. எனக்கு அழுகை வருது தலைவரே. எஸ்ஐஆர் வேலை எல்லாம் … Read more

IND vs SA ODI: CSK கேப்டன் ருதுராஜ் பிளேயிங் 11 இருக்காரா? கே.எல். ராகுல் பதில்!

Will Ruturaj Be In India playing 11 Against South Africa: தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைந்தது. இதில் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்திய தென்னாப்பிரிக்கா அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் விளையாட இருக்கிறது.  Add Zee News as a Preferred Source … Read more

இலங்கையை சூறையாடிய ‘டிட்வா புயல்’ பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்வு….

கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல்,  இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்ந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை வானிலை ஆய்வு மையம், அங்கு, இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று … Read more

டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர் பலி

புதுடெல்லி, தெற்கு டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் திக்ரி பகுதியில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். எனினும், தீ விபத்தில் சிக்கி 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் கட்டிடத்தின் உரிமையாளர் சதேந்தர் (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த … Read more

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

ராஞ்சி, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் … Read more

டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிப்பு; 3 நாட்களாக இலங்கையில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்

கொழும்பு, ‘டிட்வா’ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயலின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மணிக்கு 10 கி.மீ வேக்த்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link