சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா தாழ்வு மண்டலம்! இன்று கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா புயல் வலவிழந்தது  தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.  இதனால் சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. இன்று மாலை   கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆளுக்கு 2½ ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2½ ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி

சான்டியாகோ, 11-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் நேற்று தொடங்கியது. வருகிற 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணி என மொத்தம் 8 அணிகள் காலிறுதி சுற்றை எட்டும். இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் … Read more

டிட்வா புயல்: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 53 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு; கர்ப்பிணிகள், முதியவர்கள் மீட்பு

கொழும்பு, இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து … Read more

விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்

குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1:56 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக டெல்லி விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வழியே எச்சரிக்கை வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவின் மும்பையில் காலை 8:10 மணிக்குத் தரையிறங்கியதாக ஃபிளைட் ராடார்24 தரவு காட்டுகிறது. … Read more

2வது திருமணத்திற்கு பிறகும்..முதல் திருமண பாேட்டோவை டெலிட் செய்யாத சமந்தா!

Samantha Undeleted Photo Of Naga Chaitanya : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இதையடுத்து, அவர் டெலிட் செய்யாத பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்! ரூ. 12,500 மாத உதவித் தொகையுடன் இலவச பயிற்சி

TamilNadu Government : தமிழக இளைஞர்களுக்கு ரூ. 12,500 மாத உதவித் தொகையுடன் இலவச பயிற்சி அளிப்பது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலை கொண்டிருக்கும் வரை மழை தொடரும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப ஜான் தெரிவித்து உள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பரப்பில் நிலை கொண்டிருக்கும் வரை இப்படி மழை பெய்து கொண்டே இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். வலுவிழந்த டிட்வா புயல், கடந்த 6 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை அருகே 35 கி.மீ தூரத்தில் நிலை … Read more

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு இணைப்பு கட்டாயம்

புதுடெல்லி, சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து குறுஞ்செய்தி செயலிகளும் இனி சிம் கார்டுடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. செயலியை பயன்படுத்தும் சாதனத்தில், கணக்கை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட அதே சிம் கார்டு இருந்தால்தான் தொடர்ந்து சேவையை பெற முடியும். சிம் கார்டு இல்லாவிட்டால், சேவை முடக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் … Read more

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

கிறைஸ்ட்சர்ச், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் … Read more