இந்த 2 இந்திய வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பைதான் கடைசி.. கேப்டன்சியும் மாறும்! முழு விவரம்

Last World Cup For Two Indian Players: இந்திய டி20 அணியை வழிநடத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ். இவர் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து மூத்த வீரர் ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர் இப்பதவியை ஏற்றுக்கொண்டார். இவரது கேப்டன்சியில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், வரும் 2026 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த … Read more

Cinema Roundup 2025: இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? | எங்கு பார்க்கலாம்?

2025-ம் ஆண்டு முடிவை எட்டிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகி பெரிதளவில் பேசப்பட்ட, பலராலும் பின்ச் வாட்ச் செய்யப்பட்ட வெப் சீரிஸ்களை இங்கு பார்ப்போமா… கோலிவுட்: * குற்றம் புரிந்தவன் (Kuttram Purindhavan)இயக்குநர் செல்வமணி முனியப்பன் இயக்கத்தில் பசுபதி, விதார்த் ஆகியோரின் நடிப்பில் சோனி லிவ் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களை பெரிதளவில் கவனம் ஈர்த்தது. * சுழல் 2 (Suzhal – The Vortex)முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் சீசன் … Read more

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை வெளியிட்டது சிபிஎஸ்இ கல்வி வாரியம்….

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் 2026 திருத்தப்பட்ட தேதிகள் அனுமதிச் சீட்டுகளிலும் பிரதிபலிக்கும் என்றும், பள்ளிகள் அதற்கேற்ப தங்கள் உள் தேர்வு அட்டவணைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ.   பள்ளிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த   12ஆம் … Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் நாளை மீண்டும் சிபிஐ விசாரணை

புதுடெல்லி, கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு குழு கண்காணித்து வருகிறது. இந்த குழுவினரிடம் … Read more

5வது டி20 போட்டி: இலங்கைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறு வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஈரான் மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா

தெஹ்ரான், மத்திய கிழக்கு நாடான ஈரான், நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு சரிவு மற்றும் அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணயமான (ரியால்) மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து, சுமார் 13,90,000 ஆக புதிய சாதனை அளவிற்கு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, … Read more

"என்னோடு நின்ற தம்பி இளமகிழன்" – உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?

“வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன்” என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுகவினர் பேசி வருகிறார்கள். நலத்திட்ட விழா மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உசிலம்பட்டி வித்தியாசமான தொகுதி. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி 9 முறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 1 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். … Read more

மும்பையில் பின்னோக்கி சென்ற பஸ் மோதி 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்

மும்பை, மும்பை பாண்டுப்பில் உள்ள ரயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மாநகர பஸ் ஒன்று அங்கு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) ஓட்டினார். பகவான் பாவ் கரே (47) கண்டக்டராக பணியில் இருந்தார்.பஸ் நிறுத்தம் அருகே வந்ததும், எதிர்பாராத விதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றது. அப்போது அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த 13 பேர் மீது பஸ் மோதி … Read more

மகளிர் பிரீமியர் லீக்: எல்லிஸ் பெர்ரி உள்பட 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் விலகல்

டெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பை மற்றும் வதோதராவில் வரும் 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவி மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். … Read more

போதைப்பொருள் கடத்தி வந்ததாக படகு மீது அமெரிக்கா தாக்குதல் – 2 பேர் பலி

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், வெனிசுலாவுக்கு சென்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. அதேவேளை, கடல் வழியாக போதைப்பொருள் … Read more