Hardik Pandya maiden List A century: இந்தியாவின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விஜய் ஹசாரே கோப்பையில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தனது முதல் லிஸ்ட் A சதத்தை அடித்துள்ளார். இன்று நடைபெற்ற விதர்பாவுக்கு எதிரான போட்டியில், பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக், வெறும் 68 பந்துகளில் 100 ரன்களை அடித்துள்ளார். 38வது ஓவரில் 62 பந்துகளில் 66 ரன்களுடன் இருந்த ஹர்திக், அடுத்த ஓவரில் அதிரடி வேகத்தை காட்டினார். 39வது ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியும் அடித்து 34 ரன்களை ஒரே ஓவரில் குவித்தார். இந்த அதிரடி பேட்டிங் மூலம், ஹர்திக் வெறும் 6 பந்துகளில் 66 ரன்களில் இருந்து 100 ரன்களை கடந்தார்.
Add Zee News as a Preferred Source
6,6,6,6,6,4 BY HARDIK PANDYA TO COMPLETE HUNDRED FROM JUST 68 BALLS IN VIJAY HAZARE TROPHY
– This is Madness by Hardik. pic.twitter.com/IuCo9SEghi
— Johns. (@CricCrazyJohns) January 3, 2026
முதல் லிஸ்ட் A சதம்
8 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் 143.06 என்ற ஸ்டிரைக் ரேட்டில் சதம் அடித்துள்ளார். இறுதியாக 92 பந்துகளில் 133 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 119 லிஸ்ட் A போட்டிகளில் 2350 ரன்களுக்கு மேல் குவித்தும், 13 அரை சதங்கள் அடித்தும், முதல் சதத்திற்காக காத்திருந்த ஹர்திக், இந்த சாதனையை அடைந்துள்ளார். பரோடா அணி 19.1 ஓவர்களில் 71/5 என்ற நிலையில் இருந்த போது ஹர்திக் களத்தில் இறங்கினார். 30.3 ஓவர்களில் 136/6 என்ற நிலையில் அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா வெளியேறியபோது, அணி மேலும் சிக்கலில் இருந்தது. இந்த நெருக்கடியான தருணத்தில் ஹர்திக் பொறுப்பேற்று அணியை காப்பாற்றினார்.
T20 உலக கோப்பை
T20 உலக கோப்பை தொடங்க இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ஹர்திக் தனது சிறந்த ஃபார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார். உலக கோப்பைக்கு டீம் இந்தியாவில் யாரெல்லாம் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றால், ஹர்திக் பாண்டியா அதில் முன்னணியில் இருப்பார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் விளையாடிய ஹர்திக், சிறிது நாட்கள் ஓய்வில் இருந்து தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இது இந்த சீசனில் அவர் விளையாடும் முதல் உள்நாட்டு 50 ஓவர் போட்டி ஆகும்.
Hardik shouldn’t play domestic cricket, otherwise the careers of young bowlers will be at risk. pic.twitter.com/sgB81vFm9A
— Amar (@KUNGFU_PANDYA_0) January 3, 2026
உள்நாட்டு கிரிக்கெட் வருகை
நவம்பர் இறுதியில் காயத்திலிருந்து மீண்ட ஹார்திக், பரோடாவிற்காக விளையாட தொடங்கினார். டிசம்பர் 2 அன்று பஞ்சாபுக்கு எதிராக களமிறங்கிய அவர், 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்களுடன் தனது முதல் போட்டியையே அசத்தல் பேட்டிங்குடன் தொடங்கினார். BCCIயின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அனுமதியுடன், ஹர்திக் பரோடாவின் மூன்று லீக் போட்டிகளில் இரண்டில் விளையாட திட்டமிட்டுள்ளார். ஜனவரி 11 அன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கு முன்னதாக அவர் ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக்கின் இந்த விஸ்வரூப பேட்டிங் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நிர்ஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் அவர் காட்டிய பவர் ஹிட்டிங் இன்றைய தினத்தின் சிறப்பு அம்சமாக திகழ்ந்தது. மற்ற பரோடா பேட்ஸ்மேன்கள் சிரமப்படும் நிலையில், ஹார்திக் ஒருவரே தனது அதிரடி இன்னிங்ஸால் தனித்து நின்றார். இது அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது. உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் விளையாட உள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
About the Author
RK Spark