கணவர் இல்லாத கடைசி காலம்… யார் உங்களைப் பார்த்துப்பாங்க? – `பெண்களுக்காக!' | Personal Finance

நீங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்.
அல்லது சொந்தமாகத் தொழில் செய்யலாம்.
அல்லது வீட்டை நிர்வாகம் செய்யும் ‘ஹோம் மேக்கராக’ இருக்கலாம்.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள்: “கடந்த 10 வருஷமா நான் ஓயாம உழைக்கிறேன். ஆனா இன்னைக்கு என் சொந்தப் பெயர்ல, என் இஷ்டத்துக்குச் செலவு பண்ண, எவ்ளோ பணம் இருக்கு?”

பதில் “பெரிதாக ஒன்றுமில்லை” என்றால்… நீங்கள் ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள்!

பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு:

ஆண்கள் சம்பாதித்தால், முதலில் தங்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் எடுப்பார்கள், பி.எஃப் போடுவார்கள்…

ஆனால் பெண்கள் சம்பாதித்தால்?

“வீட்டு லோன் கட்டிக் கணவருக்கு உதவலாம்.”

“பிள்ளைகளோட ஸ்கூல் ஃபீஸ் கட்டலாம்.”

“தங்கம் வாங்கலாம் (அதுவும் மகள் கல்யாணத்துக்குத் தான்!).”

இப்படியே உங்கள் உழைப்பு முழுவதும் குடும்பத்துக்காகக் கரைந்துவிடுகிறது.

கடைசியில், 50 வயதில் திரும்பிப் பார்த்தால்…
வீடு கணவர் பெயரில் இருக்கும்.
கல்விச் செல்வம் பிள்ளைகளிடம் இருக்கும்.
உங்கள் கையில்? வெற்றுத் தனிமை.

ஏன் நீங்கள் சொந்தமாக முதலீடு செய்ய வேண்டும்?

இது பயமுறுத்தல் அல்ல; விழிப்புணர்வு…

ஆயுட்காலம் அதிகம்:
இந்தியாவில் பெண்கள் ஆண்களை விடச் சராசரியாக 4-5 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள். கணவர் இல்லாத அந்தக் கடைசி 5 வருடங்கள்… நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதா?

கையில் பணம் இல்லாவிட்டால், மருந்துக்கும், சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அது ஒரு சுயமரியாதைப் போராட்டம்.

வேலை நிரந்தரம் இல்லை:
பெண்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் ‘ கெரியர் பிரேக்’ (Career Break) வரலாம். குழந்தைப்பேறு, உடல்நலக் குறைபாடு, பெற்றோர் பராமரிப்பு எனப் பல காரணங்கள். அப்போது உங்கள் சொந்தப் பணம் மட்டுமே உங்களுக்குத் துணை நிற்கும். கணவரின் சம்பளத்தை நம்பி இருப்பது, ஒரு காலில் நிற்பது போன்றது.

நிதிச் சுதந்திரம்:
ஒரு புடவை வாங்கவோ, அம்மாவுக்கு உதவவோ கணவரிடம் அனுமதி கேட்பது… அது அடிமைத்தனம். உங்கள் பணத்தை நீங்களே நிர்வகிப்பதுதான் உண்மையான கெத்து!

Woman starts investing

தீர்வைக் கையில் எடுங்கள்: SIP எனும் ஆயுதம்!

உங்களுக்குத் தேவை லட்சங்கள் அல்ல.
உங்கள் சம்பளத்திலோ, அல்லது வீட்டுச் செலவில் மிச்சம் பிடித்தோ… மாதம் ஒரு சிறிய தொகையை ஒதுக்குங்கள்.

வெறும் ₹5,000 போதும்…
இதை வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Account) போட்டால், அது தூங்கும். பணவீக்கத்தால் கரையும்.

ஆனால், இதைச் சரியான மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் (Systematic Investment Plan) போட்டால்… அது வளரும்.

ஒரு மேஜிக் கணக்கு:

மாதம் ₹5,000.
அடுத்த 15-20 வருடத்தில், உங்கள் கையில் இருக்கப்போகும் சொந்தப் பணம்: சுமார் ₹50 லட்சம்!

யோசித்துப் பாருங்கள்…

60 வயதில் உங்கள் கையில் சொந்தமாக 50 லட்சம்!

பிள்ளைகள் உங்களைக் கொண்டாடுவார்கள்.

யாருடைய முகத்தையும் பார்க்காமல், தலை நிமிர்ந்து வாழலாம்.

வேண்டுமென்றால் உலகத்தைச் சுற்றி வரலாம்.

இது சாத்தியமா? நூறு சதவீதம் சாத்தியம்!
ஆனால், “எனக்கு இதெல்லாம் தெரியாதே… தப்பா பண்ணிடுவேனோ?” என்ற பயம் உங்களைத் தடுக்கிறதா?

Labham Webinar for women

Start Your First SIP – பெண்களுக்கான பிரத்யேக ஆன்லைன் வகுப்பு

உங்களைப் போன்ற வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், முதலீட்டின் அரிச்சுவடியைச் சொல்லித்தர ஒரு சிறப்பு வகுப்பு.

இது வெறும் வகுப்பு அல்ல; உங்கள் பயத்தைப் போக்கி, நம்பிக்கையை விதைக்கும் ஒரு சந்திப்பு.

நாள்: பிப்ரவரி 18, 2025 (புதன்)
நேரம்: மாலை 07:00 PM – 08:30 PM (இந்திய நேரம்)
மொழி: தமிழ் (எளிமையான தமிழில்)
வழங்குபவர்: ACV சுமன் பாபு, ஏரியா மேனேஜர் – சென்னை, Franklin Templeton Asset Management

இலவச போனஸ்:

கலந்துகொள்ளும் அனைவருக்கும் Expense Tracker Calculator மற்றும் Retirement Calculator முற்றிலும் இலவசம்!
(உங்கள் வீட்டுச் செலவை எப்படிக் குறைப்பது, சேமிப்பை எப்படி அதிகரிப்பது என்று கணக்கிட இது உதவும்).

எச்சரிக்கை:
இது ஒரு ஆன்லைன் பயிற்சி வகுப்பு. வெறும் 50 இடங்கள் மட்டுமே உள்ளன. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் சுதந்திரத்தைத் தள்ளிப்போடுகிறீர்கள்.

உங்கள் பெயரில் முதல் முதலீட்டைத் தொடங்க, இன்றே இணையுங்கள்.

இலவசமாகப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-feb18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb18_2026

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.