அசாம் முதல்வரின் மனைவிக்கு பல பாஸ்போர்ட்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதாகவும், அவை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றசாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை முதல்வரும் அவரது மனைவியும் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக குவாஹட்டி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான தவறான தகவல் வழங்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. […]