சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் பாலியல் சம்பவம், கஞ்சா அதிகரித்துள்ளது என்று பேசிய கூட்டணி கட்சி தலைவரான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றி பேசியுள்ளார். ‘பெண்களுக்கு திமுகதான் காவலன்’ என்று கூறியதுடன், தனது பேச்சை ஊடகங்கள் மாற்றி செய்தி வெளியிட்டுள்ளதாக, ஊடகங்கள் மீது பழியை சுமத்தி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற […]