விஜய்: "இது ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, ஒரு மௌனப் புரட்சி" – எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட காணொளி

ஏப்ரல் 23-ம் தேதி, வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. இன்று மாலையோடு பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைகின்றன.

விஜய்யின் தவெக-வும் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பலரும் பிரசாரம் மேற்கொண்டார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்நிலையில், இன்றோடு பிரசாரம் முடிவடையவிருக்கும் சூழலில், இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், “தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு இன்னும் சில நாட்களில் ஒரு மாற்றத்துக்கான ஒரு நாள் வரப்போகிறது. அது உண்மையான ஒரு மாற்றம். அதற்காகப் பல பேர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த இயக்கத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக உழைக்கக்கூடிய, போராடக்கூடிய ஒரு இளைஞன் வருகிறார். எத்தனையோ தடைகள், எல்லாவற்றையும் தாண்டி வந்துகொண்டிருக்கிறார். ஒரு தொண்டனாக உங்களுக்குத் தலைமை ஏற்க வந்திருக்கிறார்.

இந்தத் தேர்தல், வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கின்ற தேர்தலாக மட்டும் பார்க்காதீர்கள். இது ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, ஒரு மௌனப் புரட்சி.

அந்தப் புரட்சி மௌனமாக, கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு புரட்சி. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வேண்டும் என்று பலருடைய கனவு. அந்தக் கனவை நிறைவேற்றக்கூடிய நாள் ஏப்ரல் 23.

அந்தப் புரட்சி, அந்த மாற்றம் நடக்க வேண்டும் என்றால், உங்களுக்குள்ளே ஒரு விரல் புரட்சி நடக்க வேண்டும். அந்த ஒரு விரல் ‘விசில்'” எனக் கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.