மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு; 11.6% வாக்குதான் மம்தாவிற்குச் சவாலா?

தமிழ்நாட்டில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடந்து வருவதுபோல, மேற்கு வங்கத்திலும் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தின் அடுத்த கட்ட தேர்தல் வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் ஆகும். அதில் 152 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 152 தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.6 கோடி ஆகும்.

தேர்தல்
தேர்தல்

2011-ம் ஆண்டில் இருந்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் மம்தா பானர்ஜிக்கு இது ஒரு டஃப்பான தேர்தல் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக கடுமையாக உழைத்து வருகிறது.

இதே எண்ணத்தோடு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக மேற்கு வங்கத்தில் கடினமாக உழைத்தது.

2021-ன் ஆண்டு ரிசல்ட் படி, திரிணாமுல் காங்கிரஸ் 215 சீட்டுகளை அள்ளியிருந்தது. பாஜக 77 சீட்டுகளில் வெற்றி பெற்றிருந்தது.

இப்படியான வித்தியாசத்தில் இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜியால் வெற்றி பெற முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இதற்கு முக்கியக் காரணம் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் 89 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மொத்த வாக்காளர் சதவிகிதத்தில் இது 11.6 சதவிகிதம் ஆகும்.

2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் 48 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜக 38 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது.

இப்போதைய 11.6 சதவிகித வாக்காளர் நீக்கம் மம்தா பானர்ஜிக்குப் பாதகமாக அமையுமோ என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.