தவெக வேட்பாளர் மீது 600 கோடி மோசடி புகார்..! தீயசக்தி அவதூறு பரப்புவதாக பரபரப்பு பேட்டி..

TVK Tirupattur Candidate : வாணியம்பாடி தொகுதி, தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு, சுமார் ரூ.600 கோடி வரி ஏய்ப்பு மோசடி புகாரில் சமீபத்தில் சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா?

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது. அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது. அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது ‘கார்மேனி செல்வம்’ படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி. Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம் அன்பான … Read more

வெடித்து சிதறிய போர் விமானம்… ஈரானிடம் சிக்கிய அமெரிக்க விமானி – போரில் முக்கிய ட்விஸ்ட்

Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க விமானியை ஈரானி் தற்போது பிடித்துவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் ரூ.1,000 கோடியை நெருங்கும் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம்..!

துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம், 2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது!  

வந்தாச்சு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்… மேலூர் மட்டும் மிஸ்ஸிங் – காரணம் என்ன?

Congress Candidates List: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 27 வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. மேலூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுகிறார். ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் இணைந்து ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெவால்ட் பிரெவிஸ் எப்போது சிஎஸ்கே அணியில் இணைவார்? முக்கிய தகவல்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் பிரேவிஸ் களமிறங்குவாரா? சிஎஸ்கே ரசிகர்களுக்கு வெளியான முக்கிய அப்டேட்! முழு விவரம் இதோ!  

Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி' டெம்ப்ளேட் சினிமா – இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா?

மகள் மட்டுமே உலகம் என தூத்துக்குடியில் வாழ்ந்து வரும் சக்திவேல் (லெஜண்ட் சரவணன்), அங்கு மெக்கானிக்காக இருக்கிறார். துறைமுகத்திற்கு வருபவர்களின் வாகனங்களைப் பழுது பார்ப்பதே இவரின் பிரதான வேலை. துறைமுகத்தில் பல்வேறு கிரைம் விஷயங்கள் நடப்பதாக அறியும் காவல் அதிகாரி ஆண்ட்ரியா, அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போராடுகிறார். அதற்காகத் தினமும் துறைமுகத்திற்கு வந்து போகும் சக்திவேலிடம் உதவி கேட்கிறார். Leader Review | லீடர் விமர்சனம் ஆனால், வாடிக்கையாளருக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென ஆன்ட்ரியாவின் வேண்டுகோளை … Read more

செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? – வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி அதன்படி செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர், வேளச்சேரியில் அசன் மெளலானா, பென்னாகரத்தில் ஜி.கே.எம் தமிழ்குமரன், ஆத்தூரில் அர்த்தநாரி, கவுண்டபாளையத்தில் சூர்யபிரகாஷ், சிங்கநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு உள்ளிட்டோர் போடியிடுகின்றனர். மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.! முழு விவரம்: காங்கிரஸின் முழு வேட்பாளர்கள் பட்டியல் Source link

Yaan Foundation வழங்கும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல் வெளியானது!!

இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.