புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி வெற்றி; காங்கிரஸை எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்?

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றிருக்கிறார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றிருக்கிறார். 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்குக் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் சூழலில் காலை 10 மணி நிலவரப்படி ஆளும் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ரங்கசாமி
ரங்கசாமி

தொடர்ந்து த.வெ.க 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. சற்று முன்பு உப்பளம் தொகுதியில் அதிமுக புதுச்சேரி செயலர் அன்பழகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தற்போது காங்கிரஸ் எம்பி-யுமான வைத்தியலிங்கத்தை 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறை ரங்கசாமி வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.