டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் பாஜகவின் அழுத்தத்தில் இருக்கிறார், அதனால்தான தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டி உள்ளார்.. தமிழக ஆளுநரை டிவிகே தலைவர் விஜய் இன்று இரண்டாவது முறையாக சந்தித்து, ஆட்சி அழைக்க உரிமை கோரிய நிலையில், இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “…தமிழகத்தில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மக்கள் ஒரு புதிய […]