கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இன்று (மே 7ந்தேதி) தொடங்கி உள்ளது. இதற்கான கடைசி நாள் ஜூன் 8ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பிரிவுகளில் சேருவதற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த மாணவர் சேர்க்கையில், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் அயலக வாழ் தமிழர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுகள் […]