ஏழையாக பிறப்பது தவறல்ல.. ஆனால் ஏழையாகவே மடிவது உங்கள் தவறு என்று கூறியவர் திரும்பாய் அம்பானி. ஆரம்ப காலக்கட்டங்களில் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் யார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பலரும் சொல்லும் பதில் டாடா, அம்பானி, பிர்லா தான்.
குஜராத் மாநிலத்தில் சேர்வாட் என்னும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தான் திருபாய் அம்பானி. இவரின் உண்மையான பெயர் தீரஜ்லால் ஹீராச்சந்த் அம்பானி.
இவரின் தந்தை பள்ளி ஆசிரியர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த திரும்பாய் அம்பானி, சிறு வயது முதலே வணிகத்தில் ஆர்வம் கொண்டவரான திரும்பாய் அம்பானி, பள்ளிப்படிப்பை முடித்த பிறக்ய் வெளி நாட்டில் சென்று பணிபுரிந்துள்ளார்.
முடிவுக்கு வருகிறது ஸ்மார்ட்போன் காலம்: நோக்கியா சி.இ.ஓ சொல்லும் புதிரான தகவல்
பலரையும் கோடீஸ்வரர் ஆக்கியவர்
அதன் பிறகு 1958ல் இந்திய திரும்பியவர் பல வணிகங்களை தொடங்கியுள்ளார். அப்போது உதயமானது தான் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன். இதில் பல வணிகங்களை செய்து வந்தவர், படிப்படியாக தனது வணிகத்தினை வளர்த்தெடுத்த அம்பானி, தன் வளர்ச்சிக்கு பங்குதாரர்கள் மிக முக்கியமான உயிர் நாடி என புரிந்து கொண்ட அம்பானி, டிவிடெண்ட், போனஸ் போன்றவற்றை வாரி இறைத்தார். பலரையும் இதன் மூலம் கோடீஸ்வரர் ஆக்கியவர்.
முக்கிய காரணம்
இப்படி பல பெருமைகளை உள்ளடக்கிய திரும்பாய் அம்பானி 2002ல் மரணமடைந்தார். இன்று அம்பானிகளின் சாம்ராஜ்ஜியத்திற்கு முக்கிய காரணம் திரும்பாய் அம்பானியே. அப்படிப்பட்ட ஒரு பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்கியவர் வாழ்ந்த வீட்டை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நினைவில்லம்
இந்திய ஜவுளிச் சந்தையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் திருபாய் அம்பானி. இவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தினை உருவாக்கியவர். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள திருபாய் அம்பானியின் மூதாதையர்கள் வசித்த வீடு, திருபாய் அம்பானி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.
இரு முக்கிய பகுதிகள்
இந்த கட்டிடம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி தனியார் பயன்பாட்டிற்காக உள்ளது. இரண்டாவது பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் அங்கு கோகிலா பென் அம்பானி வருகை தருவதாக கூறப்படுகிறது.
இதில் தனியார் பயன்பாட்டிற்காக உள்ள பகுதி, பழமை மாறமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு மேலுன் அழகு சேர்க்க புதியதாக பல மரங்கள், செடி, கொடிகள் என பலவும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பழமை மாறமல் பராமரிப்பு
இதனை இன்னும் மெருகேற்றும் விதமாக பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக நீருற்றுகள், சிறிய ஓடை போன்ற அமைப்புகள், தென்னை தோப்புகள், குளிரான கால நிலை என மக்கள் விரும்பும் அம்சங்களுடன் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பழமை மாறமல் பலவும் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் கோடி வணிக சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்கிய அம்பானியின் மூதாதையர்களின் நினைவாக இன்றும் இது கம்பீரமான நினைவிடமாக உள்ளது.
பாசத்திற்கான அடையாளம்
உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் என்னும் மாபெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி. அவரிடம் அம்பானி சகோதரர்கள் கொண்டுள்ள பாசத்தினை இந்த நினைவில்லம் இன்றும் சுட்டிக் காட்டுகின்றது எனலாம்.
Dhirubhai Ambani’s ancestral home: which is now a memorial house
Dhirubhai Ambani was the one who caused a great revolution in the Indian textile market. He is the founder of Reliance Group. In this post you can see about the ancestral house of Dhirubhai Ambani which has been converted into a memorial house in the current year.