HIV பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட 15 வயது சிறுமி! பகீர் சம்பவம்


இந்தியாவில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை தனது உடலில் 15 வயது சிறுமி செலுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதன்படி 15 வயது சிறுமிக்கும், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாத அளவிற்கு உயிராக காதலித்தனர்.
சில முறை அச்சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி காதலனுடன் ஓட்டம் பிடித்திருக்கிறார்.
அப்போதெல்லாம் அவர் பெற்றோர் தான் வீட்டிற்கு சிறுமியை மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

HIV பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட 15 வயது சிறுமி! பகீர் சம்பவம் | Girl Injects With Lover Hiv Positive Blood

ஆனால் இந்த முறை சிறுமி யாரும் கற்பனை கூட செய்து பார்க்காத ஒரு விபரீத செயலை செய்துள்ளார்.
அதன்படி எச்.ஐ.வி-பாசிட்டிவ் காதலனின் உடலில் இருந்து சிரிஞ்ச் மூலம் இரத்தத்தை எடுத்து தனது உடலில் செலுத்தி கொண்டிருக்கிறார். தனது காதலை நிரூபிக்க இவ்வாறு அவர் செய்திருக்கிறார்.

இதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் அவர் வசிக்கும் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையில், பொலிசார் சிறுமியின் காதலரான இளைஞரை கைது செய்துள்ளனர்.
மேலும் சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.