விஜய் டிவி பிரபலத்தின் குட் நியூஸ்; குடும்பத்தினர் மகிழ்ச்சி

சின்னத்திரையில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளம். அப்படி பட்ட ஒரு ஜோடி தான் தீபக் மற்றும் அபிநவ்யா. இவர்களும் ஒன்றாக சீரியலில் நடித்த போது காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் அபிநவ்யா  நடித்துள்ளார், இப்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார். தீபக் இப்போது ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார். 

இந்த ஜோடி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது அபிநவ்யா கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் புகைப்படத்துடன் ஷேர் செய்துள்ளனர். அதில் எங்கள் குடும்பத்தில் புதியவர் வளர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு உங்களின் எல்லோருடைய ஆசிர்வாதமும் தேவை. இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என தீபக் அபிநவ்யா தம்பதி தெரிவித்துள்ளது.

தீபக், டிக்டாக்கில் பிரபலமான முகமாக இருந்தார். அவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிச் சென்றது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் என்ட்ரியான தீபக் அடுத்தடுத்து ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இதனால் மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக, விரைவில் தந்தையாக போகிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.