மான்செஸ்டரில் இருந்து ரொனால்டோ வெளியேறிய பிறகு…மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் எடுத்துள்ள முக்கிய முடிவு


மான்செஸ்டர் அணியில் இருந்து முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் விலகியதை தொடர்ந்து அவரது மகன் ஜூனியர் கிறிஸ்டியானோ-வும் Man Utd இளைஞர் அணியை விட்டு வெளியேறியுள்ளார்.

கிளப்பில் இருந்து விலகிய ரொனால்டோ

கத்தார் 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னால் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும் கத்தார் கால்பந்து உலக கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, மான்செஸ்டர் கிளப்பில் இருந்து முற்றிலுமாக விலகி கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய முன்னாள் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட்டில் இணைந்து பயிற்சியை தொடர்ந்து வருகிறார்.

மான்செஸ்டரில் இருந்து ரொனால்டோ வெளியேறிய பிறகு…மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் எடுத்துள்ள முக்கிய முடிவு | Cristiano Ronaldo Jr Leaves Man UtdCristiano Ronaldo(GIUSEPPE)

மேலும் 37 வயதுடைய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது புதிய கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தை தேடி வருகிறார்.

இதில் சவுதி அரேபியாவின் “அல்-நாஸர் கிளப்” ஐந்து முறை பலோன் டி’ஓர்(Ballon d’Or ) வெற்றியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ-வை தங்கள் அணியில் இணைத்து கொள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தந்தையை தொடர்ந்து மகனும் விலகல்

இந்நிலையில் தந்தையான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியரும் மான்செஸ்டரில் கிளப்பின் இளைஞர் அணியில் இருந்து வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் இளைஞர் அணியில் இணைந்துள்ளார்.

மான்செஸ்டரில் இருந்து ரொனால்டோ வெளியேறிய பிறகு…மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் எடுத்துள்ள முக்கிய முடிவு | Cristiano Ronaldo Jr Leaves Man Utd

தந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோவை போலவே ஜூனியர் ரொனால்டோ-வும், முதலில் ரியல் மாட்ரிட்டில் இருந்து மான்செஸ்டர் கிளப்பிற்கும் பின்னர் மீண்டும் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கும் திரும்பியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு  ரொனால்டோ தனது மகன் மீதான நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டி இருந்தார், அதில் “எனது மகன் ஒரு வீரராக வேண்டும். நான் ஒரு கால்பந்து வீரர் மற்றும் அவரும் ஒரு கால்பந்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”. 

“அவரிடம் ஏதோ ஒரு விளையாட்டு வீரர் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவரிடம் தடகள குணாதிசயங்கள் உள்ளன, வெளிப்படையாக அவர் மிகவும் சிறியவர், ஒரு குழந்தை, அவருக்கு ஐந்து வயதுதான், ஆனால் அவர் கால்பந்தை நேசிக்கிறார். அது ஒரு பெரிய பிளஸ்”.

மான்செஸ்டரில் இருந்து ரொனால்டோ வெளியேறிய பிறகு…மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் எடுத்துள்ள முக்கிய முடிவு | Cristiano Ronaldo Jr Leaves Man Utd(Twitter / @utdreportAcad)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.