பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரட்ன தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கை பதுளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் யூரியா உரத்தை வழங்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.