காஷ்மீரில் 186 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் 56 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 186 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் கூறினார். 2022-ம் ஆண்டின் கடைசி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் மட்டும் 56 பாகிஸ்தானியர்கள் உட்பட 186 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 100 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டுகளை விட இது குறைவு. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத்தை களைய சரியான பாதையை நோக்கி பயணிக்கிறோம். தீவிரவாதம் உறுதியாக களையப்படும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.