முதல் படத்திலேயே இப்படியா?: லிப்லாக் காட்சியில் நடித்த அனிகா

தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த மலையாள குழந்தை நட்சத்திரமான அனிகாவுக்கு, தற்போது 18 வயதை கடந்துள்ளதால் ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் ‛புட்ட பொம்மா'. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் கடந்த வாரம் வெளியானது.

இதனைத்தொடர்ந்து அனிகா, ‛ஓ மை டார்லிங்' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ஆல்ப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா. காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில், அனிகா தனது முதல் மலையாள படத்திலேயே இதழ் முத்தக்காட்சியில் (லிப்லாக் காட்சி) நடித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.