இம்பாலா:
மணிப்பூரில் பெண்கள் பாலியல் பலாத்தாரம் செய்யப்பட்டு நடு ரோட்டில் நிர்வாணமாக நடக்க வைக்கப்பட்ட வீடியோ இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இதற்கு காரணம் ஒரே ஒரு பொய் செய்தி (Fake News) எனக் கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த கொடூர சம்பவத்துக்கு மட்டுமல்ல.. மணிப்பூரில் பெரிய அளவில் கலவரம் உருவாவதற்கே அந்த செய்திதான் காரணமாக இருந்துள்ளது தற்போது தெரியவந்திருக்கிறது. பொய் செய்திகளை பரப்புவோரை ஈவு இரக்கமின்றி களையெடுக்க வேண்டும் என்பதற்கு மணிப்பூர் கலவரமே சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்.
மணிப்பூரில் குக்கி பழங்குடி இனத்தவருக்கும், மைத்தேயி இனத்தவருக்கும் இடையேயான மோதலால் அந்த மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. சுமார் 2 மாதங்களாக நடந்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணுவம் களமிறக்கப்பட்டும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன்பு அங்கு நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்துள்ளது. குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, சிலர் கூட்டு பலாத்காரம் செய்து சாலையில் நிர்வாணமாக நடந்து வரச் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி நாட்டையே உலுக்கியது. குக்கி சமூகத்தினருக்கு எதிராக மணிப்பூர் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ள நிலையில், இந்தக் கொடூர சம்வபத்துக்கும் பாஜகவினர்தான் காரணம் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவம் நிகழ்வதற்கு மூலக்காரணம் தற்போது தெரியவந்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி குக்கி இனத்தவருக்கும், மைதேயி இனத்தவருக்கும் இடையே சிறிய அளவில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அன்றைய தினம் இரவு ஒரு புகைப்படம் மணிப்பூரில் வேகமாக பரவியது. அதில், ஒரு பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு சாலையோரம் வீசப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்துக்கு மேலே, “மைதேயி இனத்தைச் சேர்ந்த பெண்ணை குக்கி சமூகத்தினர் பலாத்காரம் செய்ததோடு கொலையும் செய்துள்ளனர்” என எழுதப்பட்டிருந்தது.
“ரோடு காலியா இருக்கே”.. சாலை என நினைத்து தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்ற “குடிமகன்”.. “ஜஸ்ட்டு மிஸ்ஸு”
ஆனால், உண்மை என்னவெனில், அந்த புகைப்படம் டெல்லியைச் சேர்ந்த பெண்ணின் கொலை சம்பவம் தொடர்புடையது. இதை சில விஷமிகள் மணிப்பூரில் நடந்ததை போல பொய் செய்தி பரப்ப, விஷயம் தெரியாமல் மைதேயி இனத்தவர்கள் கொந்தளித்து போயினர். இதுவே மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் உருவாவதற்கும், தற்போது குக்கி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கும் காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.