சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் பாம்புகளை பிடிக்க தமிழ்நாடு அரசு நாகம் என்ற பெயரில் மொபைல் செயலியை (Mobile App) அறிமுகப்படுத்தி உள்ளது. உலக பாம்புகள் தினம் ஜுலை 16ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு நாகம் செயலியை வெளியிட்டார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., […]
