IPL 2026 Mini Auction: ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் ஏலம் நடைபெறுவது வழக்கம். மெகா ஏலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மினி ஏலம் மற்ற ஆண்டுகளிலும் நடைபெறும். அந்த வகையில், கடந்தாண்டு 2025 சீசனில் மெகா ஏலம் நடைபெற்றதை தொடர்ந்து, 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட விதிகளின் மூலம், மெகா ஏலத்தில் பதிவு செய்த வீரர்களால் மட்டுமே மினி ஏலத்தில் பங்கேற்க முடியும். அதன்படி, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் மினி ஏலத்தில் பங்கேற்க இயலாது. கேம்ரூன் கிரீன் உள்ளிட்டோர் மெகா ஏலத்தில் பதிவு செய்து, காயம் காரணமாக அதில் பங்கெடுக்கவில்லை. அதனால் தற்போது அவர்கள் மினி ஏலத்தில் பங்கேற்பார்கள்.
மினி ஏலத்தை முன்னிட்டு 10 அணிகளும் பெரும்பாலான வீரர்களை தக்கவைத்து, ஒரு சில வீரர்களை விடுவிக்கும். விடுவிக்கப்படும் வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கெடுப்பார்கள். தற்போது அணிகளுக்கு இடையிலான டிரேடிங் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மினி ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம் எப்போது நடக்கும்?
அதன்படி, ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. அதாவது, டிசம்பர் 13-15 தேதிகளுக்குள் ஐபிஎல் மினி ஏலம் நடத்தப்படும் எனலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.
IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம் எங்கு நடைபெறும்?
அதேநேரத்தில் மினி ஏலம் எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடைசி இரண்டு ஆண்டுகளிலும் ஏலம் துபாய் மற்றும் சௌதி அரேபியாவில் நடைபெற்றிருந்தது. இந்த முறையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மினி ஏலம் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்தியாவிலேயே நடத்தலாம்.
தக்கவைப்பு வீரர்களை அறிவிக்க கடைசி தேதி
மேலும், 10 அணிகளும் தங்களின் தக்கவைப்பு பட்டியலை (Retentions List) சமர்பிக்க கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதி என கூறப்படுகிறது. அதற்குள் யார் யார் தக்கவைக்கப்படுகிறார்கள், யார் யார் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது உறுதியாகிவிடும். சஞ்சு சாம்சன், தீக்ஷனா, ஹசரங்கா, வெங்கடேஷ் ஐயர், நடராஜன், ஸ்டார்க், ஆகாஷ் தீப், மயங்க் யாதவ், டேவிட் மில்லர் ஆகியோர் விடுவிக்கப்படும் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கழட்டிவிடப்படும் நடராஜன்… இந்த 3 பௌலர்களை குறிவைக்கும் டெல்லி!
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த தோனி? ஐபிஎல் 2026ல் முக்கிய முடிவு?
மேலும் படிக்க |ஐபிஎல் 2026ல் சஞ்சு சாம்சன் அணிக்கு பெரிய பின்னடைவு! என்ன செய்ய போகிறது RR?