இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடரை நேரலையாக பார்ப்பது எப்படி?

India vs New Zealand Live Streaming : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் 2026 ஆம் ஆண்டை தொடங்குகிறது இந்திய கிரிக்கெட் அணி. அதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இந்த தொடரை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம். இந்த தொடரை நேரலையாக பார்ப்பது எப்படி?, எந்ததெந்த தேதிகளில் போட்டிகள் நடக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

Add Zee News as a Preferred Source

இந்தியா – நியூசிலாந்து தொடர்

இந்திய கிரிக்கெட் அணி தனது 2026 ஆம் ஆண்டு சீசனை நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் மிகவும் உற்சாகமாகத் தொடங்குகிறது. இப்போட்டிகளுக்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கின்றன. ஜனவரி 11 முதல் ஜனவரி 18 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாகவும் இருக்கப்போகிறது.

இந்திய அணியின் பலம்

இந்தத் தொடருக்கான இந்திய அணியை சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார். கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்புவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காயம் காரணமாக சில காலம் ஒதுங்கியிருந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தற்போது முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளார். அவர் இந்த தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பெரும் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆல்-ரவுண்டர்களாகச் செயல்பட, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் முத்திரை பதிக்க உள்ளனர்.

நியூசிலாந்து அணியின் சவால்

மறுபுறம், நியூசிலாந்து அணி மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் களமிறங்குகிறது. டெவோன் கான்வே, டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பலமான சவாலை இந்தியாவுக்கு அந்த அணி கொடுக்கும். ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் ஆகியோரும் அணியில் இருப்பதால், இந்தத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் நேரம்

இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக வதோதரா மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாடவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14-ம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜனவரி 18-ம் தேதி இந்தூரிலும் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளுமே பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன. மதியம் 1:00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, சரியாக 1:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

நேரடி ஒளிபரப்பு

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் பல்வேறு மொழிகளில் நேரலையில் காணலாம். இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி மூலம் போட்டிகளை நேரலையாகக் கண்டு களிக்கலாம். இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து ஜனவரி 21 முதல் ஜனவரி 31 வரை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | CSK பிளேயிங் 11 இப்படி இருந்தா நல்லா இருக்கும்.. 28 வயது இந்திய வீரருக்கு வாய்ப்பு – முழு விவரம்!

மேலும் படிக்க | விலகும் திலக் வர்மா… இந்திய அணியில் இந்த 3 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு – சரியான மாற்று யார்?

மேலும் படிக்க | முக்கிய வீரருக்கு ஆப்ரேஷன்… இந்திய அணிக்கு ஷாக் – டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்?

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.