நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கம்

நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் இசக்கிமுத்து, செல்லப்பா, மாறி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

கொல்கத்தா: மனைவி தொடுத்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் தடையை நீக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி – அவரது மனைவியான மாடல் அழகி ஹசின் ஜஹான் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு இருந்தது. முகமது ஷமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜஹான் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி, ஜாதவ்பூர் காவல் … Read more

மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார். மதுரை சிறைத்துறையிடம் 1,000 புத்தகங்களை அன்பளிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நேரில் வழங்கினார்.

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. 75 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம்-ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை 31கி.மீ. தூரம் வரை மெட்ரோ ரயில் விட திட்டமிடப்பட்டுள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரான நிலையில் விரிவான திட்ட அறிக்கை தயாராகி ஒப்புதல் கிடைத்தவுடன் பணி துவங்கும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்செய் பாட் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர உத்தரவு அளித்துள்ளனர். காவல் நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்பதால் மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பழமையான கட்டிட்டம் என்பதால் எந்நேரமும் இடிந்து விழும் அபாயமும் உள்ளது. ஆங்காங்கே கட்டிடத்தின் தூண்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதேனும் சின்ன பொருட்கள் வைத்து இடித்தாள் கூட இடிந்து விழும் நிலையில் தெப்பக்குளம் … Read more

சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில பணக்காரர்களுக்கு ஒதுக்கிய 160 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போது நடக்கும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல்

டெல்லி: கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்க மாநிலங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

கோவை சிட்கோ அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உயிரிழப்பு..!!

கோவை சிட்கோ அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் கைது..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதனகோபாலசுவாமி கோயில் எழுத்தர் ரவி கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தும் சிங்காரத்திடம் லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்.