கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த இந்து முன்னணியின் மாவட்ட துணை தலைவர் அயோத்தி ரவி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை செய்யும் போது அவரிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உதவி மேலாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி … Read more

இன்றுடன் முடியும் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை வரும் 31ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: இன்றுடன் முடியும் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை வரும் 31ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வை எழுதாமல் விடுப்பட்டவர்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தல் நடைமுறைகல் நடத்தி முடிக்க வேண்டியது விதி ஆகும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே … Read more

வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

*அரசே கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தல் வத்திராயிருப்பு : விலை வீழ்ச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கவலையில் உள்ளனர். அரசே கூடுதல் விலை நிர்ணயம் செய்து தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு, கான்சாபுரம், புதுப்பட்டி, பிளவக்கல் அணை, சேதுநாராயணபுரம், நெடுங்குளம். தாணிப்பாறை அடிவாரம் மந்தித்தோப்பு, மகாராஜபுரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 7500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. … Read more

செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது

சென்னை: செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் மணி கைது செய்யப்பட்டார். செக்மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கீழ்பாக்கம் போலீசார் மணியை கைது செய்தனர்.

பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு

காளஹஸ்தி : திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி அடுத்துள்ள ஏர்பேடு மண்டலம் பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை இம் மாதம் 18 ஆம் தேதி தனியார் நிறுவனத்தினர் மூடப்பட்தோடு வருவாய் மற்றும் போலீசார் ஆதரவோடு நெடுஞ்சாலைக்கு குறுக்காக (தடுப்பு) சுவரை அமைத்து விட்டனர். இதனால் சிந்தேப்பள்ளி கிராமத்திற்குச் செல்லும் பாதை மூடப்பட்டன.  மூடப்பட்ட பாதையை (எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்) ESL தொழில்துறையினர்  திறக்கும் வரை போராடுவோம் என திங்கட்கிழமை (நேற்று) முதல் சிந்தேபள்ளி கிராமத்தில் உள்ள சிவன் … Read more

சேலத்தில் இருந்து சீரடிக்கு 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற முதியவர்

சேலம்: சேலத்தில் இருந்து சீரடிக்கு 1,207 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வெற்றியுடன் திரும்பிய 82 வயது முதியவருக்கு தாரை, தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் தக்கஸ் கிளப் தலைவராக இருந்து வரும் கனகசபாபதி தமது 82 வயதை கூட பொருட்படுத்தாமல் சேலத்திலிருந்து சீரடிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரி 16ம் தேதி சேலத்திலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் பயணித்து சீரடியில் … Read more

கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின..!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சந்தைப்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.