நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த ரூ.26,275 கோடி: மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025-26-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.26,275 கோடியை செலவிடவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது. இந்தத் தொகையானது ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், புதிதாக பட்டாலியன்களை உருவாக்குதல், அதிநவீன ஃபாரன்சிக் (தடய அறிவியல்) ஆய்வகங்கள் உருவாக்குதல், இதர காவல் துறை கருவிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு செலவிடப்படும். … Read more