முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்தியஅரசு கூறிய நிலையில், தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று விமர்சித்தார். இந்த … Read more

திருச்சி அருகே இரவு மின்தடை: கதவை திறந்து வைத்து தூக்கிய பெண்ணின் 12 பவுன் தாலி சங்கிலி அபேஸ்…!

திருச்சி: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறி வரும் நிலையில், திருச்சி அருகே  இரவு ஏற்பட்டு வரும் மின் தடையால், காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய  ராணுவ வீரர் மனைவியிடம் இருந்து 12 பவுன் தாலி செயினை திருட்டு கும்பல் பறித்துச்சென்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்துள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகம். இவர் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். படை பிரிவில் … Read more

பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றிஎரியும் தீ! பொதுமக்கள் சுவாச கோளாறால் அவதி…

சென்னை: சென்னையின் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலை பெருங்குடி  குப்பை கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ இன்று 2வது நாளாக தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அந்த பகுதியை சூழ்ந்துள்ள கரும்புகையால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடுமையான சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர். தென்சென்னையின் பிரதான குப்பை கிடங்காக பெருங்குடி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் … Read more

28/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு 2,563 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 2,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 4ஆயிரத்தை கடந்துள்ளது.  தினசரி பாதிப்பு விகிதம் 0.66% ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்  வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக மேலும்  3,303 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை … Read more

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள்! பிடிஆர் பதிலடி

சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில்  பெட்ரோல் டீசல் விலை ரூ.100ஐ தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதனால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக  பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடத்திய ஆலோசனையின்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு தமிழகம் … Read more

ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி

சென்னை: ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற அந்தக் கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக, அப்போது விளக்கமளித்த ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாணவர்கள் தாமாக முன்வந்து சம்ஸ்கிருதப் பாடலை பாடியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நவம்பர் … Read more

சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் கூடியது. தற்போது துறை வாரியாக மானிய … Read more

6-12 வயதினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

புதுடெல்லி: 6– 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வருகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இதில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல எழுச்சி பெறத்தொடங்கியது. குறிப்பாக டெல்லி, அரியானா, … Read more

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம்

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன், வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக் கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். … Read more

நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ரகுபதி…

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, சீர்திருத்தச் சிறகுகள்’ திட்டம் உள்பட 32 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று  நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார். அதன்படி, சார்பு நீதிமன்றங்கள் அமைத்தல், 24 மனநல ஆலோசகர்களுக்கு (Counsellors) தற்போது வழங்கப்பட்டு வரும் … Read more