‘சீல் வைப்போம்’ என அதிகாரிகள் எச்சரிக்கை: 4ஆண்டுகால சொத்துவரியை மொத்தமாக கட்டினார் கவிஞர் வைரமுத்து…

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,  4ஆண்டுகால சொத்துவரியை கட்டாமல் ஏமாற்றி வந்த கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு சீல் வைப்போம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகால வரியையும் மொத்தமாக செலுத்தி உள்ளார். இது தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் சொத்துவரி மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன், சொத்து … Read more

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயிற்சி முகாம்! சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் எனவும், அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களுக் கான நிர்வாகப் பயிற்சி முகாமில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு  நிர்வாகப் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. மாநில  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இந்து சமய … Read more

கேரளாவில் 21வயது இளைஞருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று…

திருவனந்தபுரம்: கேரளாவில் 21வயது எக்ஸ் இ வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள மாநில மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், லாக்டவுன் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த உருமாறிய தொற்று ஒரு மாதத்திற்கு முன்பே கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் முதல்வாரத்தில், மும்பையில் எக்ஸ்இ புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவ்வாறு புதிய … Read more

மனைவியுடன் தாம்பத்யம் நடத்த ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் ! ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை…

ஜெய்ப்பூர்: மனைவியுடன் தாம்பத்யம் நடத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை அளித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கு காரணமாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்த் லால்  என்பவரை சந்ததி உரிமை (Right Of Progeny) அடிப்படையில் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி அவரது மனைவி ரேகா என்பவர்,  ராஜஸ்தான் உயர் நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த … Read more

தமிழகத்துக்கு ஒப்பந்தப்படி நிலக்கரி அனுப்ப உத்தரவிடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்துக்கு ஒப்பந்தப்படியும், தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (22-4-2022) கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து … Read more

எம்எல்ஏக்களுக்கும் கார் கொடுங்க! சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை…

சென்னை: எம்எல்ஏக்களுக்கும் கார் கொடுங்க என சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார். இது அவையில்  சிரிப்பலையை  ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று  விதி 110-ன்கீழ், பேசிய முதல்வர்,  தமிழ்நாட்டில் மீண்டும் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன்  உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்கு உயர்த்தப்படும் என்று கூறியதுடன், அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு … Read more

மோடிஅரசு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனம் – சசிகலாவிடம் காவல்துறை விசாரணை குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

மோடிஅரசு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின் விமர்சனம்  மற்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் காவல்துறை நடத்தும் விசாரணை குறித்தும் கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-cartoon-Audio-2022-04-22-at-1.20.49-PM.ogg

சட்டப்பேரவையில் மின்வெட்டு தொடர்பாக இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் பதில் – வெளிநடப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட மின்வெட்டு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அமைச்சர்அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று என்று கூறி அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அரசின் நிர்வாகத் திறமையின்மையே மின்வெட்டு பிரச்சினைக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சமீப நாட்களாக அடிக்கட்டு ஏற்பட்டு வரும் … Read more

சி.எஸ்.கே.வின் பரபரப்பான வெற்றிக்கு காரணமான தோனிக்கு குவியும் பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்த எம்.எஸ். தோனிக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகிறது. MSD finishes it off in style!!! #TATAIPL pic.twitter.com/ZhtyE2UKfW — IndianPremierLeague (@IPL) April 21, 2022 டாஸ் வென்ற சி.எஸ்.கே., மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. Well played @msdhoni skipper 😂🙌 — Suresh Raina🇮🇳 (@ImRaina) April 21, 2022 ஆட்டம் … Read more

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தைச்சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் மீதான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இதனால், இந்த வழக்கு மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது சாலைப்பணி உள்பட சில பணிகளுக்காக மக்கள் நலப்பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இது அதைத்தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இதனால்,  13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வேலை இழந்தனர். இது  அரசியல் காழ்ப்புணர்ச்சி  என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் … Read more