டெலிகிராம் பாணியைக் கையில் எடுக்கும் வாட்ஸ்அப்… புதிய அப்டேட்டில் உள்ள வசதி என்ன?

வாட்ஸ்அப் செயலியை விட டெலிகிராம் செயலியில் இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் டெலிகிராமில் 1.5 GB வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும். வாட்ஸ்அப் செயலியில் வெறும் 100MB வரையிலான ஃபைல்களைத்தான் அனுப்ப முடியும். இதனால் வாட்ஸ்அப்பில் பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாமல் பயனர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் 2GB வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை தனது அடுத்த அப்டேட்டில் கொண்டுவரவுள்ளது. வாட்ஸ்அப் இந்தப் புதிய அம்சம் தற்போது ஆப்பிள் iOS தளத்தில் சோதனை … Read more

திண்டுக்கல்: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து… வெடித்துச் சிதறிய பட்டாசுகள் – மூவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே வீரக்கல் கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டாசு தயாரிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தேனி, மதுரை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. விபத்து இந்தப் பகுதியில் திம்மராய பெருமாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்திவரும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நான்கு பேர் பணி செய்துவருகின்றனர். இந்த நிலையில், அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கருப்பையா, சசிகுமார் ஆகியோர் … Read more

SRH vs RR: பவர்ப்ளேயிலேயே ஆட்டத்தை முடித்த ராஜஸ்தான்; கடந்த சீசனின் ஹேங்ஓவரோடு தள்ளாடும் சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒன்சைடு மேட்ச்சாக முடிந்திருக்கிறது. சகலவிதத்திலும் சன்ரைசர்ஸை புரட்டியெடுத்த ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜஸ்தானுக்கு இவ்வளவு பெரிய வெற்றி எப்படிக் கிடைத்தது? சன்ரைசர்ஸ் எங்கே சறுக்கியது? சமீபத்திய டி20 மற்றும் இந்த ஐ.பி.எல் தொடரின் ட்ரெண்ட்படி டாஸை வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனான வில்லியம்சன் பந்துவீச்சையே தேர்வு செய்தார். இன்றைய நாளில் சன்ரைசர்ஸுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இந்த டாஸ் வெற்றிதான். … Read more

இன்றைய ராசி பலன் | 30/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஹைதராபாத்: வாட்ஸ்அப் வீடியோ கால் மிரட்டல்… 55,000 ரூபாயை இழந்த வாலிபர் – நடந்தது என்ன?!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் வசிக்கும் 30 வயது இளைஞர் ஒருவருக்குத் தெரியாத ஓர் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்துப் பேசியபோது எதிர்முனையில் யாரும் பேசவில்லை, எந்தச் சத்தமும் வரவில்லை. சற்று நேரத்தில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரின் எண்ணுக்கு, வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் அவரின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ இருந்துள்ளது. போன் மிரட்டல் அழைப்பு உடனடியாகத் தங்களுக்குப் பணம் அனுப்பவில்லையென்றால், அந்த … Read more

காஞ்சிபுரம்: பள்ளி மாணவி கழிவறையைச் சுத்தம் செய்த சம்பவம் – பணியிடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள ஆனம்பாக்கம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களால் வெளியாகி வைரலானது. கழிவறையைச் சுத்தம் செய்யும் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மாணவி பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை … Read more

“அரசியல் பக்குவமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை!" – ஆர்.எஸ்.பாரதி காட்டம்

தமிழக அமைச்சர்கள், முதல்வர் மீது தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போவுக்கு சென்றதைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்காக, 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ரூ.100 கோடி நஷ்ட ஈடாக முதல்வர் நிவாரண நிதிக்கு 2 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும். இதைச் செய்யத் தவறினால், சிவில் … Read more

பணிமாறுதல் பெற்ற கையோடு… அரசுப் பள்ளியில் மகனைச் சேர்த்த கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்!

சென்னை தி.நகர் துணை கமிஷனராக இருந்த ஹரி கிரன் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த 26-ம் தேதி பதவி ஏற்றார். ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஹரிகிரன் பிரசாத் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி-யில் படித்தவர், 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். திருச்சியில் பயிற்சி ஏ.எஸ்.பி-யாகவும், வள்ளியூரில் ஏ.எஸ்.பி-யாகவும் சென்னை தி.நகர் துணை கமிஷனராக பதவி வகித்தார். முதன் முதலாக மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருப்பதால் நாகர்கோவில் எஸ்.பி … Read more

உணவில் புழு; புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு – உணவக உரிமையாளரை எச்சரித்த உணவுப் பாதுகாப்புத்துறை!

சேலம் மாநகரில் உள்ள பிரியாணிக்கடை ஒன்றில் தால்ச்சாவில் புழு இருந்ததாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அனுப்ப, உணவுப்பாதுகாப்புத்துறையினர் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், புகார் சொன்னவர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையிலடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மருத்துவர்களும், ஒரு மருத்துவ மாணவரும் அடக்கம். சேலம் திருவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ஆதம் பாக்ஷா. இவர் ஏ.எம்.பிரியாணி எனும் பெயரில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் வைத்துள்ளார். இவரது கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, … Read more

ஸ்டாலினின் தனி விமானப் பயண சர்ச்சை – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டும், ஆளும் தரப்பு விளக்கமும்!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக, புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துபாய் வர்த்தக கண்காட்சி முடியும் தறுவாயில் அங்கு சென்றது ஏன்?” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வும் இதே விமர்சனத்தை முதல்வர் ஸ்டாலினின் பயணம் குறித்து முன் வைத்திருக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் … Read more