தென்காசி: புதருக்குள் பதுங்கிய ரௌடி… டிரோன் உதவியுடன் பிடித்த போலீஸ் – சினிமாவை மிஞ்சிய த்ரில்!

தென்காசியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தனர். இந்த நிலையில், தென்காசி நகரத்தில் உள்ள சிலரை அரிவாளைக் காட்டி அந்த ரௌடி மிரட்டியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குளத்துக்குள் பதுங்கியிருந்த ரௌடி ஆனாலும் அவர் எங்கு பதுங்கியுள்ளார். என்பது மர்மமாக இருந்தது. போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் சாகுல் ஹமீது யாருக்கும் தெரியாமல் அங்குள்ள … Read more

தம்பி மகளுக்கு தொல்லை கொடுத்தவரைக் கண்டித்த பூசாரி கார் ஏற்றிக்கொலை – தாய், மகன் உட்பட 6 பேர் கைது!

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (46). அந்தப் பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். செந்திலின் சகோதரர் மகளான வினிதாவும் (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பந்தல்குடி லிங்காபுரத்தைச் சேர்ந்த பெத்துக்குமார் (27) என்பவரும் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், வினிதா காதலனைப் பிரிந்து வீரசோழன் ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு அனிதாவின்‌ கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், … Read more

தேர்தல் தோல்வி எதிரொலி; 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு!

பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற 4 மாநிலங்களில் பாஜக-வும் வெற்றிபெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. காங்கிரஸின் இந்த வீழ்ச்சி குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போது அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு … Read more

வேலூர்: 9-ம் வகுப்பு மாணவனுக்கு பிளேடு வெட்டு; 14 தையல்! -சக மாணவன் வெறிச்செயல்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பரதராமி பூஜாரி வலசை கிராமத்திலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில், வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறான். நேற்றைய தினம் சக மாணவன் ஒருவனுடன் அந்தச் சிறுவனுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அந்த சிறுவன் வகுப்பறையில் புத்தகப் பையை வைத்துவிட்டு பென்சில் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளான். அப்போது, நேற்று தகராறில் ஈடுபட்ட அந்த மாணவன் கையில் மறைத்து … Read more

காலநிலை மாற்றம்: `அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும்!' – அலெர்ட் கொடுக்கும் IPCC ஆய்வறிக்கை

வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான குழு (ஐபிசிசி). இது தொடர்பாகப் 2022 பிப்ரவரி 28-ம் தேதி, 67 நாடுகளைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்குகொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், `நவீன நுகர்வு வாழ்க்கை முறைகளால் இயற்கையை விட அதிகமான வெப்பம் ஏற்படுகிறது. அப்படி உருவாகும் அளவுக்கு அதிகமான வெப்பம் பூமியிலிருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதை வெளியேற்றுவதற்கான வழியை விரைவில் ஏற்பாடு செய்யாவிட்டால் பூமியில் … Read more

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்: வடிவேலுவின் ஆன் தி ஸ்பாட் `டைமிங் காமெடி' தான் ஸ்பெஷல் – இயக்குநர் சுராஜ்

வடிவேலு நடிக்கும் `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தொடர்ந்து 15 நாள்கள் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்ப நடந்திருக்கிறது. பெரிய யூனிட்டாய் அங்கே போய் இறங்க அரண்மனையை கலகலத்திருக்கிறது. எல்லாமே வடிவேலை மையமாகக்கொண்ட காமெடிதானாம்.இயக்குநர் சுராஜ்‌ – வடிவேல் கூட்டணி தான் படத்தின் ஹைலைட். ஷுட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு கொண்டு வந்த டைமிங் ஜோக்குகளையே தனியாகத் தொகுத்துகொண்டு வந்துவிடலாம் என்கிறார்கள். 20 நாட்கள் நீடிக்க வேண்டிய படப்பிடிப்பு 15 நாட்களுக்குள்ளேயே முடிந்துவிட்டதாம். ரொம்ப … Read more

ஆலியா பட் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரன்பீர் கபூரின் அம்மா… வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், இன்று மார்ச் 15-ல் தனது 29வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் பிரம்மாஸ்திரா (Brahmastra) படத்தின் படக்குழுவினர் ஆலியா பட்டின் போஸ்ட்டரையும், அவரின் கதாபாத்திரம் இடம்பெற்ற ஒரு டீசரையும் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பாலிவுட் நடிகையும் ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூர், ஆலியா பட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நீது கபூரின் பதிவு இதற்கு முன்னரே, … Read more

Ajith 62: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில்… காமெடி ஜானரில் களமிறங்குகிறாரா அஜித்?

‘வலிமை’க்கு பின் மீண்டும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. அஜித்தை பொறுத்தவரை ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துவிடுவார். அதுவும் அவருக்கு தோதுவான இயக்குநர்கள் என்றால் அடுத்தடுத்து அவர்களிடமே தன்னை ஒப்படைத்தே விடுவார். அப்படித்தான் ‘சிறுத்தை’ சிவாவுடன் நான்கு படங்களில் பணியாற்றினார். அதனையடுத்து ஹெச்.வினோத்துடன் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். வலிமை அஜித் சரி விஷயத்திற்கு வருவோம். ‘அஜித் 61’ படப்பிடிப்பில் அஜித் பங்கேற்றாரா, … Read more

செம்பா: “பாரபட்சமற்ற கதிரவனல்ல… பசித்தலையும் தீ’’ | பகுதி 26

விண்மீன்கள் ஒளிர்ந்த வானையே வெறித்தபடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிடந்தான் இஜினாசி. பொறுப்பை இருளின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு கடை சாத்திக்கிளம்பியிருந்தது ஒளி. சுற்றிலும் பார்த்தான். ஊரடங்கிருந்தது. இரும்பாலையும் அன்றைய நாளின் கடைசிப் பணிகள் முடிந்து மெல்ல இருளுக்குள் சுருண்டு கொண்டிருந்தது. ஆலைக் கூம்புகளின் நெருப்புகள் கறுத்து உறக்கத்தில் விழத் தொடங்கியிருந்தன. கண்கள் கண்ட காட்சிகளைக் கொண்டு தன் மனதின் கேள்விகளுக்கெல்லாம் காலத்தைப் பதிலாக்கிப்பார்த்தான் இஜினாசி. `கண்ணுக்ககப்படாத கரங்கள் கொண்டு காலம் தான் எப்படி அனைவரையும் அடக்கிவைக்கிறது? இல்லை காலம் அடக்குவதில்லை. … Read more

கல்வி விவகாரங்களில் வரம்பை மீறுகிறாரா ஆளுநர் ரவி?! – குற்றச்சாட்டுகளும் நிலவரமும்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மார்ச் 11-ம் தேதி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, “கல்வி, தனித்து இருக்க வேண்டியதில்லை. தேசிய அளவில் கல்வி இருக்க வேண்டும். எனவே, உயர் கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்“ என்று ஆளுநர் பேசியிருக்கிறார். ரவி தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ரவி இருக்கிறார். … Read more