அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்று சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது இதையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட … Read more

ஒரு ஓட்டுக்கூட பெற விடாமல் அதிமுக-வை தோற்கடித்த சுயேச்சை! -வென்றதும் அதே கட்சியில் இணைந்த சுவாரஸ்யம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராம்ஷா, சுயேச்சையாக பிரதிவிராஜா மற்றும் இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில், சுயேச்சையாகக் களமிறங்கிய பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். 149 வாக்குகள் வாங்கிய திமுக பரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்குப் பதிவான … Read more

இன்றைய ராசி பலன் | 23/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் திமுக கவுன்சிலர்கள்? – என்ன நடக்கிறது நெல்லையில்?

நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 51 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் சார்பில் மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையம் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உடனடியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். பெரும்பாலான வேட்பாளர்கள் … Read more

“வரலாறு காணாத வெற்றி… தமிழக மக்களின் அன்பை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்போம்!" – அண்ணாமலை ட்வீட்

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமலே இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதியன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே பரபரப்பாகத் தொடங்கி, மாலையில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. ஸ்டாலின் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க பெரிய அளவில் நகராட்சி, … Read more

How to: வீட்டுக்குள் ஏற்படும் காற்றுமாசுவைக் குறைப்பது எப்படி? | How to reduce indoor air pollution?

வாகனங்களின் எரிபொருள், தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றம் எனக் காற்று மாசுபாடு வீட்டிற்கு வெளியேதான் இருக்கிறது என்றால், வீட்டிற்கு உள்ளேயும் சமையல் வேலைகள், பழையதை எரிப்பது, செல்லப்பிராணிகள் வளர்ப்பு எனப் பல காரணங்களால் காற்று மாசு காணப்படுகிறது. Pollution (Representational Image) How to: வாட்டர் டேங்க்கை சுத்தப்படுத்துவது எப்படி? | How to clean Water tank? இப்படி வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டை சின்ன சின்ன விஷயங்களை கவனித்து செய்வதன் மூலமாகக் குறைக்க, தவிர்க்க முடியும். … Read more

டோலிவுட்டின் நியூ க்ரஷ் இவர்தான்..! யார் இந்த ஶ்ரீலீலா ?

ஹீரோயின்களை அழகுப் பதுமைகளாக காட்டுவதில் டோலிவுட் கில்லி. அந்த நாயகிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் ஃப்ரேமில் ஜொலிப்பார்கள். பாடல் காட்சிகளில் மேக்கப், வித்தியாசமான டிசைன்களில் காஸ்ட்யூம் எனப் பல புரட்சிகளை உருவாக்குவர். அப்படி ஒரு ஹீரோயின் டோலிவுட்டின் க்ரஷ் மெட்டீரியலாக மாறிவிட்டால் போதும், அடுத்த ஆறேழு வருடங்களுக்கு செம பிஸியாகிவிடுவார்கள். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மொழி படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சரி, அரியணை ஏற்றுவது என்னவோ தெலுங்கு சினிமாதான். … Read more

"பிடித்த காமெடி நடிகரின் குடும்பத்துக்கு விஜய் கொடுத்த ஒரு லட்ச ரூபாய்!"- நெகிழும் `காக்கா' கோபால்

காமெடி நடிகராக நமக்குத் தெரிந்தவர் காக்கா கோபால். மிருகங்களுடன் உரையாடுவது அவரின் தனித்திறன். ஆடு, மாடு, கோழி, காகம் என அனைத்து உயிரினங்களிடமும் அத்தனை இயல்பாய் உரையாடி அசர வைக்கிறார். இயக்குநராக வேண்டும் என எண்ணி நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து.. ‘காக்கா’ கோபால் “இப்ப மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். தொடர்ந்து, நல்ல நல்ல சீரியல்கள் வந்துட்டு இருக்கு. இத்தனை வருட இடைவெளியை சீக்கிரமே … Read more

"என் படங்கள் குறித்து மீம்ஸ் போட்டு தேவையில்லாத நாடகம் ஆக்கிவிட்டார்கள்!"- விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியைச் சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலிலிருந்து சில துளிகள். உங்களை யாரும் நிராகரித்ததுண்டா? விஜய் சேதுபதி “அதெல்லாம் பண்ணியிருக்கிறார்கள். அது இல்லாமல் எப்படி. ஆனால், என்னிடம் கடினமாக நடந்துகொண்டு பின்னர் என் … Read more

மதுரை: மு.க.அழகிரி ஆதரவாளர் வெற்றி – அதிர்ச்சியில் திமுக தரப்பு!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. தி.மு.க வேட்பாளர்கள் அதிகமாக வெற்றி பெற்று வரும் சூழலில், மதுரை 47-வது வார்டில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு போட்டியிட்டார். முபாரக் மந்திரி தி.மு.க ஆட்சிக்கு … Read more