பெலராரஸ் வெளியுறவு அமைச்சரின் கொலைக்கு காரணம் நோவிசோக் விஷமா? தீவிர விசாரணை

Russia-Ukraine War: பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி மரண விவகாரத்தில், ரஷ்யா மீது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. விளாடிமிர் மெக்கியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விஷப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 29) மெக்கியின் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தன. 64 வயதான முன்னாள் உளவாளி மற்றும் இராஜதந்திரி விளாடிமிர் மெக்கி ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக தி டெய்லி மெயிலின் அறிக்கை … Read more

போலி ஆவணங்களை சமர்ப்பித்தாரா தனுஷ்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.  அதில், “கடந்த 2017ஆம் ஆண்டு … Read more

உறைய வைக்கும் குளிரிலும் நீர் விளையாட்டில் உச்சம் தொடும் காஷ்மீரி வீராங்கனைகள்

ஸ்ரீநகர்: இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்குடன் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள், நீர் விளையாட்டுகளில் பயிற்சி பெறுகின்றனர். ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 2.2 டிகிரியாக பதிவாகியிருந்தாலும், இந்த நீர் விளையாட்டு வீராங்கனைகள், தங்கள் பயிற்சியை நிறுத்தவில்லை. இப்பகுதி முழுவதும் உறைபனி வெப்பநிலையுடன், இந்த பெண்கள் தால் ஏரியில் ஒவ்வொரு நாளும் மணிநேரம் பயிற்சி செய்கிறார்கள். ரோயிங் முதல் கேனோயிங் வரை, இந்த காஷ்மீரி பெண்கள் நாட்டிற்கு விருதுகளை கொண்டு வர விரும்புகிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த வீராங்கனைகள் உலகம் … Read more

சீனாவுடனான நட்பின் பொற்காலம் முடிந்துவிட்டது: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்ற செய்தியை வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கிலாந்தின் ‘மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு’ சீனா தொடர்ந்து சவால் விடுத்து வருவதாக கூறிய அவர், வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையில், … Read more

மயான டீக்கடை! 26 கல்லறைகளுக்கு நடுவில் கல்லா கட்டும் டீக்கடை

Gujarat Grave Restaurant: குஜராத் மாநிலத்தில், தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று பிரதான கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அளித்துள்ளன. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்காளர்களை கவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பெரிய அளவிலான வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஒருபுறம் பாஜகவுக்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சவால் இருக்கும் நிலையில், பாஜகவின் கோட்டையில் கால் பதிக்க காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஆயத்தமாகி வருகின்றன. குஜராத் தேர்தல் … Read more

விபத்தில் நினைவை இழந்த கணவர்… மனைவியிடம் கேட்ட அந்த கேள்வி – நெகிழ்ச்சி தருணம்!

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மற்றும் ஆண்ட்ரூ மெக்கன்ஸி ஜோடி, கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிர் தப்பியுள்ளனர். போக்குவரத்து சிக்னலில் நிக்காமல் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் அந்த விபத்து நிகழந்ந்துள்ளது.  ஏறத்தாழ சுமார் 50 அடி தூரத்திற்கு இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு கொடூரமான விபத்தில் சிக்கிய அவர்களுக்கு, கடுமையான ரத்தப்போக்கு, நுரையீரல், எலும்புகளில் பலத்த காயம் என அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட … Read more

2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தாரா ஏன் இந்தியா நிறுவனங்கள் இணைகின்றன

நியூடெல்லி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (எஸ்ஐஏ) இன்று விஸ்தாரா-ஏர் இந்தியா இணைப்பை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் தேசிய விமான நிறுவனத்தை வாங்கிய டாடா சன்ஸ் உடன் ,அதன் விஸ்டாரா முழு சேவை விமான நிறுவனத்தை இணைக்கிறது. இதற்கான கூட்டு முயற்சியை இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் 25.1% உரிமையாளராக செயல்படுவதாக விஸ்தாரா தெரிவித்துள்ளது. டாடா குழுமம் தற்போது விஸ்தாராவில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது, மீதமுள்ள 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் உள்ளது. … Read more

Video : உள்ளே இருந்த ஜெகன் மோகனின் தங்கை… காரை அப்படியே தூக்கிச்சென்ற போலீசார்!

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ரெட்டி தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவராக உள்ளார். தெலங்கானாவின் தற்போதைய கேசிஆர் தலைமையிலான அரசை எதிர்க்கும் விதமாக, இவர் கடந்த 200 நாள்களுக்கு மேலாக இந்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  அந்த வகையில், நேற்று வாராங்கல் மாவட்டத்தின் நாஸாரம்பேட் பகுதியில் ஷர்மிளா பாதயாத்திரை மேற்கொண்டபோது, அவருடைய ஆதரவாளர்களுக்கும், … Read more

அதிர வைக்கும் காதல் கொலை! 5வது காதலனைக் கொல்ல உதவிய 4 காதலர்கள்

நாளந்தா: நாட்டில் தொடரும் கொலை சம்பவங்கள் பலரிடமும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. கணவரின் மரணத்திற்குப் பிறகு, தனியாக வாழ்ந்து வந்த ஒரு பெண், ஐந்தாவது காதலனைக் கொன்றார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்,தனது நான்கு காதலர்களுடன் சேர்ந்து ஐந்தாவது காதலனைக் கொன்றார். கணவர் இறந்த பிறகு பலருடன் உறவு வைத்திருந்த பெண், நான்கு காதலர்களுடன் இணைந்து ஐந்தாவது காதலனைக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான கொலை, பீகாரில் நடைபெற்ற சம்பவம் ஆகும்.  பீகார் மாநிலம் நாளந்தா … Read more

கோழியால் நின்ற திருமணம்… வாயடைத்துபோன பெண் வீட்டார்!

திருமணத்தை செய்து பார்… வீட்டை கட்டிப்பார்.. என்ற சொலவடையை கேட்காதவர்கள் மிகச்சிலரே. அந்த அளவிற்கு ஒரு திருமணத்தை நடத்துவது சிரமமான ஒன்றுதான். சடங்கு, சம்பிரதாயம், உறவின் முறை அழைப்பு போன்ற பல விவகாரங்களும், பிரச்னைகளும் சேர்ந்ததுதான் திருமணம். அப்படியிருக்க, அந்த திருமணத்தை எப்படியாவது வெற்றிகரமாக, எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடித்திட வேண்டும் என்பதைதான் இருவீட்டார் நினைப்பார்கள். ஆனால், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், திருமணத்திற்கு முந்தயை நாள் உணவில் சிக்கன் வகைகளை பெண் வீட்டார் ஏற்பாடு செய்யவில்லை … Read more