திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். டெல்லி சென்றவர் நடந்தாய்வாலி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் … Read more

கர்நாடக மாநிலத்தில் நடந்த தீண்டாமையின் உச்சம்; நடந்தது என்ன?

பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்காகப் போராடியுள்ளனர். தற்போது 21ஆம் நூற்றாண்டு நடந்துவரும் நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த போதிலும் இந்தச் சாதி ஒழிந்தபாடில்லை. இந்தகாலத்திலும் சில பழமையான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பின்பற்றி வருகிறார்கள். அதன்படி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் தீண்டாமை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளானா? டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

அடுத்த மாதம் 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதர்கா ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படுகிறது.  சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர … Read more

ராமநாதபுரம்: மகளை கர்ப்பமாக்கிய பெரியப்பா: கைது செய்த காவல்துறை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாரியூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(46). இவருடைய  மனைவியின் தங்கையும்  மற்றும் அவருடைய  கணவரும்  சில  வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து  இறந்து போயினர். பெற்றோர்கள் இருவரும் இறந்த போனதால் யாருடைய  ஆதரவில்லாமல் அரவணைக்க யாருமின்றி  நிர்கதியாக நின்ற  அந்த  சிறுமி தனது பெரியம்மாவான ரகுநாதனின் மனைவியின் பராமரிப்பில் இருந்துள்ளார். தாய் தந்தை இருவரையும் இழந்து நிற்கும் தனது தங்கையின் மகளை தனது  மகளாக நினைத்த … Read more

சேலம்: குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. அதில், கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை கையெழுத்திட்டு புகார் மனுக்களை பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் நடைபெற்ற தூய சலேத் அன்னை ஆலயத்தின் தேர் விழாவுக்கு கூட தண்ணீர் இல்லை.  இதனால், விலைக்கு தண்ணீர் … Read more

திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள்

Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அப்துல் கனி மற்றும் சுபீனா பானு தம்பதிகள் இந்த அரிய மற்றும் பாராட்டத்தக்க நன்கொடையை அளித்துள்ளனர். இந்த தம்பதிகள், கோயிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காலத்தின் போது, கோயில் வளாகத்தில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட … Read more

லெய்செஸ்டர் இஸ்கான் ஆலய தாக்குதலில் அமைதியை மீட்கும் இந்து முஸ்லீம் மதத் தலைவர்கள்

Hindu Temple Vandalization: லெய்செஸ்டரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்கு பிறகு, இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, இரு … Read more

1 ரூபாய்க்கு இட்லி வடை; பசியாற்றும் நல்லூர் கிராமத்தின் இட்லிக் கடை!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அருகே உள்ளது இளையபெருமாள் நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் 1 ரூபாய் இட்லி கடை என்பது மிகவும் பெயர் போன இட்லி கடை. 3 தலைமுறையாக மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு இட்லி, வடை, டீ  விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் காலையில் காடு கழனிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முதல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் … Read more

கோஹினூரில் இருந்து க்ரீஸ் வரை : பிரிட்டனில் உள்ள பிற நாட்டு கலைப் பொருட்கள்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக, அவர் குறித்த செய்திகளே உலகம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. அவர் குறித்த செய்திகள் வெளியான அதே சமயம், பிரிட்டனில் உள்ள பிற நாடுகளின் விலை மதிப்பில்லா கலைப்பொருட்களை திரும்பத் தர வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன. கோஹினூர் வைரம் ராணி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கிரீடத்தில் உள்ள கோஹினூர் வைரத்தைத் திருப்பித் தர வேண்டுமென இந்தியா முழுவதிலும் இருந்து பலர் சமூக … Read more

சட்ட விதிப்படி புதிய துணை பொது செயலாளர் நியமிக்கப்படுவார்: TKS இளங்கோவன்

உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ள நிலையில், அவரது விலகலை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன்னுடைய உடல் நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, பாஜகவில் இணைய போகிறேன் என்று கூறவில்லை; பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை என்றும் டி.கே.எஸ். விமர்சனம். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய … Read more