எதுக்கு தேடுறீங்க நான் என்ன கொலைகாரனா?… ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்

வலிமை படத்தின் தோல்விக்கு பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக படத்துக்கு ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்ஹ்டின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் தற்போது பைக் ரைட் செய்துவருகிறார். இதற்காக அவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி … Read more

'லஞ்ச ஒழிப்புத்துறை அதன் கடமையை தான் செய்கிறது' – ஓபிஎஸ் கொடுத்த ஷாக்

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.  அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,”சாதாரண கிராம புறங்களில் பிறந்தவர் கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என போராடி அதில் வெற்றி கண்டவர் பெரியார். அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் ஆழமாக விதைக்கப்பட்டு, ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. அவருக்கு அதிமுக … Read more

ஒரே நாளில் தமிழில் இவ்வளவு படங்கள் ரிலீசா?

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘பஃபூன்’.  இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் பேனர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  மேலும் இந்த படத்தில் அனேகா, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படம் செப்டம்பர்-23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள தமிழ் … Read more

'மதுரை வேட்பாளர் மோடி வெற்றி' – இணையத்தில் ஹிட் அடித்த பாஜகவினரின் பிறந்தநாள் போஸ்டர்

பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜகவினரும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். பிரதமர் பிறந்தநாளான இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் தங்க மோதிரம் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் பாஜகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. ‘2024 மக்களவை தேர்தலில், மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி’ … Read more

PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் வாழ்க்கை, போராட்டம், விடா முயற்சி மற்றும் உறுதியான தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தை அளிக்கும் ஒரு ஆளுமையாக உள்ளார்.  குஜராத்தின் வாட்நகரில் பிறந்து … Read more

நரேந்திர மோடியின் பிறந்தநாள் பேனர் மீது கொடி கட்டிய விசிக!

நாடு முழுவதும் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதேபோல தந்தை பெரியாரின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். பழனி ரயில்வே பீடர் சாலையில் மின்சார வாரியம் அருகே அனுமதியின்றி பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியிலேயே பெரியாரின் சிலையும் உள்ளதால் திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சி … Read more

என்னை திருமணம் செய்தால் அரசு வேலை… 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் வசித்து வரும் சபரி (எ) சௌமியா என்ற பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட இந்த பெண் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பதை தெரிந்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், சௌமியா -வை கண்டறிந்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கரூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிவக்குமார் கூறுகையில்,  மின் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சௌமியா பலரிடம் பண மோசடி செய்துள்ளார். குறிப்பாக மின்துறை அமைச்சர் தனது உறவினர் என … Read more

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ?

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ மற்றும் ‘வாத்தி’ போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.  ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.  இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கிறார்.  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான முதல் படமான … Read more

செம பாஸ்ட்… படமாகிறது ஜாக் ஸ்பேரோ புகழ் ஜானி டெப்பின் வழக்கு

ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் ‘பைரேட்டஸ் ஆஃப் தி கரீபியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். 59 வயதான இவர், 1983ஆம் ஆண்டு லோரி அன்னே அலிசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து, 1985இல், அவரை விவகாரத்து செய்த ஜானி டெப், ஏறத்தாழ 30 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார்.  2015ஆம் ஆண்டு, பிரபல ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்டு என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜானி டெப், அடுத்த 15 மாதங்களில் அவரையும் பிரிந்து … Read more

8 ஆண்டுகள் கழித்து கணவனை பெண் என அறிந்த மனைவி… இயல்புக்கு மாறாக உறவு வைத்ததாக புகார்!

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில், 40 வயதான பெண் ஒருவர் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தன் கணவர் ஒரு பெண் என்பதையும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.  இதுகுறித்து கோத்ரி காவல் நிலையத்தில் மனைவி ஷீதல் கொடுத்த புகாரில், கணவர் விராஜ் வர்தன் (விஜய்தா) தன்னிடம் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் (Unnatural Sex) தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். … Read more