எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை  13ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  13ஆம்  திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து பிரச்சினை போக்குவரத்து பிரச்சினை, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக  அமைச்சு அறிவித்துள்ளது.  எனினும் இந்த விடுமுறை அரசாங்கத்தின் அத்தியாவசிய  சேவைகளை பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 8 – 9ஆந் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவரின் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறவுள்ளது. இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸுக்கு உத்தியோகபூர்வ மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. 2022 ஜூன் 13ஆந் … Read more

சுற்றுலா பயணிகளை கவர புதிய அணுகுமுறைகளைக் கண்டறியவும்…ஜனாதிபதி தெரிவிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். இன்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 04 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலா கைத்தொழில், மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகையில் ஏற்பட்ட நெருக்கடியான … Read more

அதிகாலை முதல் மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கும் பொதுமக்கள்

மூன்று நாட்களுக்குப் பின்பு தலவாக்கலையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு 6 ஆயிரத்து 500 லீட்டர் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலை முதல் 1800க்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில்   பட்டினியுடன் காத்திருந்தனர்.  சிலர் வீதிகளில் அமர்ந்து இருந்ததோடு, சிறுவர்கள், பாடசாலை, மாணவர்கள், முதியோர்கள், நோயாளர்கள் என பலரும் காத்திருந்தனர். இதன்போது அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு ஒருவருக்கு 250 ரூபாய் மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. மக்களின் கருத்து தம்பி அரிசிக்கு வரிசையில், அண்ணன் … Read more

இந்தியாவுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாகவே நாட்டுக்கு எண்ணெய், உரம், மா

  21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தனிப்பட்ட முறையில் விருப்ப இல்லை. இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே தான்  பதவி விலகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, நேற்று (9) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.   மேலும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும், அரசாங்கத்திலிருந்தும் தான் விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு, மஹிந்த … Read more

புனரமைக்கப்பட்ட இரத்தினபுரி மாநகர சபை கட்டிடம் 

புனரமைக்கப்பட்ட இரத்தினபுரி மாநகரசபை வளாகம் நேற்று (09) பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இரத்தினபுரி மாநகர சபை கட்டிடம்  40 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் முழு வசதியுடன் கூடிய அரங்கம், மாநாட்டு அறை, கேட்போர் கூடம், அலுவலக வளாகம் மற்றும் தீயணைக்கும் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் பண்டார டிக்கிரி கொப்பேகடுவ, முன்னாள் மாகாண அமைச்சர் ரஞ்சித், இரத்தினபுரி மாநகர சபை மேயர் டைரோன் அத்தநாயக்க, சப்ரகமுவ பிரதம செயலாளர் சுனில் ஜயலத், … Read more

அமைச்சுகள் தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சுக்கள் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழிநுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம் ஆட்பதிவு … Read more

கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவு

கொட்டாஞ்சேனை மத்திய பாடசாலையில் நேற்று (9) நடைபெற்ற நிகழ்வொன்றில், கொழும்பு மாவட்ட சேர்ந்த மூன்று பாடசாலைகளில் உள்ள , குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சீன தூதரகம் மற்றும் இலங்கை – சீனா நட்புறவு சங்கம் இணைந்து இவ் உலர் உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (10) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

நடிகர் அஜித்தை பார்த்தற்காகவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு சென்ற சிறுவன் !

அஜித்தின் தீவிர ரசிகர்   தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, ஷாருக் கான், மணிரத்னம், அட்லீ, கார்த்தி, சூர்யா என உச்ச நட்சத்திரங்கள் பலரும் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு வந்த சிறுவன் தான் இணையத்தில் வைரலாகியுள்ளான். ஆம், நயன்தாரா – … Read more