பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 25.05.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 25.05.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 25.05.2022
மின்வெட்டு மற்றும் பிற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்படும் நேரத்தில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளனர். எப்படியிருப்பினும் அடுத்த மாத சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அதிகாரிகள் எடுக்கும் முடிவை தாங்கள் ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள் அடுத்த வாரம் பயணிக்கவுள்ளனர். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள் வன்முறையாக மாறியது. எனினும் … Read more
தற்போது பெய்துவரும் மழைக்கு மத்தியில் எதிர்வரும் ஆறு மணித்தியாள காலப்பகுதிக்குள் பாலிந்த-நுவர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக நீர்ப்பாச திணைக்களம் எச்சரித்துள்ளது. இதற்கமைவாக புளத்சிங்கள – மொல்காவ வீதி – வரகாகொட -கலவெல்ல வீதி – நாலியத்த- தபல வீதி முதலான் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதிகளை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர்மட்டம் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும். களுகங்கையின் பல்வேறு … Read more
21 ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் இவ்வாரம் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளையும் உள்வாங்கிதாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் … Read more
பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக வங்கி இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளதென உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் … Read more
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022 மே 25ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவுக்கு பலத்த மழை பெய்யும் … Read more
மதுபான உற்பத்திக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட எத்தனால் ஸ்பிரிட் இருப்புக்கள் இல்லாததால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 32-34 மில்லியன் லீற்றர் ஸ்பிரிட்கள் மதுபானம் தயாரிக்கவும், மேலும் 3 மில்லியன் லீற்றர் ஸ்பிரிட் மருந்துத் தின்னர் உள்ளிட்ட மருந்துப் பொருட்களுக்குத் தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கரும்பு தட்டுப்பாடு, கோதுமை விளைச்சல் தட்டுப்பாடு, மின்வெட்டு, எரிபொருள் பிரச்னை, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு மதுபான உற்பத்திக்கு தேவையான எத்தனோல் … Read more
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடவுச்சீட்டை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் கையளித்துள்ளனர். அத்துடன், சப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் காஞ்சன ஜயரத்னவும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. பி. ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரல ஆகியோரும் தமது கடவுச் சீட்டை நீதிமன்றில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது … Read more
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய இலங்கையின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நாடாளுமன்ற துணைச் செயலாளர் விக்கி ஃபோர்ட் இதனை தெரிவித்துள்ளார். மே 9 அன்று அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததில் இருந்து இலங்கையின் நிலைமையை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா அரசு வெளிநாடுகளில் உள்ள … Read more
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது இன்று பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டதாக தெரிவித்து கல்லாற்று பிரதான வீதியில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவித்து சாரதியொருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன உரிமையாளர் தெரிவிக்கையில், எரிபொருள் நிரப்புவதற்காகவே டிப்பர் வாகனம் தனது வீடு நோக்கி வந்ததாகவும், எனினும் வீதியில் சென்ற பொலிஸார் … Read more