முல்லைத்தீவில் காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கைக்கு அமைவாகவே ஜனாதிபதி வுத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணி சுவீகரிப்பு   முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் … Read more

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குடும்பம் – வருமானத்தை அதிகரிக்கும் போலி செயற்பாடா..!

ஒவ்வொரு நாளும் உலகத்தின் ஏதாவதொரு மூளையில் வித்தியாசமான பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன. அவை மனித வாழ்க்கையில் இதுவரை பதிவாகாத வித்தியாசமான பட்டியலில் இடம்பிடிக்கின்றன. இப்படியொரு சூழலில் தற்போது திருமணங்கள் மற்றும் குடும்பங்களிலும் வித்தியாசமான சில விடயங்கள் பதிவாகி வருகின்றன. இந்த பட்டியலில் விலங்குகள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை பலவற்றைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் சில நபர்கள். பூனை, சுவர், ஈபிள் டவர், கற்பனை கதாபாத்திரம் என்பவற்றுடன் நடத்திக் கொள்ளப்பட்ட திருமணங்கள் தொடர்பான செய்திகள் … Read more

ஞானக்கா மகளின் வீட்டில் கொள்ளை

அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என்ற பெண்ணின் மகளின் வீட்டில் 80 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஞானக்காவின் மகளின் கணவர் அனுராதபுரம் பொலிஸில் தலைமையகத்தில் இந்தத் திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளார். வடமத்திய மாகாணத்தில் திட்ட முகாமையாளரான இவர், வீட்டில் உள்ள அறையொன்றின் அலமாரியில் இருந்த 650,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் … Read more

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர RSP USP psc IG அவர்கள் தனது கடமைகளை நேற்று (21) பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக இதுவரை காலம் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு துணை பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய பிரிகேடியர் வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் வெலகெதர அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக தாய் நாட்டிற்காக சேவையாற்றி … Read more

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது! IMF கடன்… – தனது இலக்கை அறிவித்தார் ரணில் (Live)

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.  நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு. நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் … Read more

இலங்கை இராணுவ வீரர்களின் சேவைகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டார். இதன்போது, தாய் நாட்டிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவைகளையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு நேற்று தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி விஜயத்தின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தற்போதேனும் ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

• கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டதிட்டங்களையும் பின்னணியையும் ஏற்படுத்தி, நாடு கட்டியெழுப்பப்படும். • இலங்கை, பொருளாதார தொங்கு பாலத்தை கடக்க தான் செயல்பட்டதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. • தற்போதைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும். • சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள் – பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு! நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி … Read more

புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

மே மாத நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22.3.2023) உரையாற்றிய அமைச்சர், அண்மையில் பல்கலைக்கழக பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் “மேலும், சுமார் 7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறுதி முடிவுகள் … Read more

இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

இலங்கையில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான மிகப்பெரிய தொண்டு நிறுவனமான இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவதுஆண்டுவிழா நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 1917 ஆம் ஆண்டில், சாரணர் இயக்கத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய இளம் பிரித்தானிய ஆசிரியை ஜென்னி கெல்வர்லியினால் முதலாவது மகளிர் சாரணர் குழுவை கண்டி உயர்மகளிர் பாடசாலையில் ஆரம்பித்தார். அதன்படி, நேற்று (21) இலங்கை சாரணர் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டு 106 வருடங்கள் பூர்த்தியாவதைக் குறிக்கும் … Read more

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. அசரவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சமந்தா  நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். 8 மாதங்களாக இந்த நோயில் கஷ்டப்பட்டு வந் இவர், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த யசோதா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியாவதாக இருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது. இதனாலேயே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. லேட்டஸ்ட் … Read more