தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் நிறைவேற்றம்

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் திருத்தங்களுடன் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மெஸ்ஸி – ரொனால்டோ மோதும் போட்டி

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் நேரடியாக மோதிக் கொள்ளும் போட்டி சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இன்று நடைபெறுகின்றது.  சௌதி ஆல்-ஸ்டார் லெவன் அணிக்கு எதிரான பிரெஞ்சு சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் இடையிலான நட்பு ஆட்டத்தில் இவர்கள் இருவரும் மோதுகின்றார்கள். ஆனால் வளைகுடா நாடுகளின் விளையாட்டில் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு இந்த நட்பு விளையாட்டு மற்றொரு உதாரணம். மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பே, நெய்மார் ஆகியோர் ஆடும் பிஎஸ்ஜி அணி கத்தார் அரச குடும்பத்துடன் தொடர்புடைய முதலீட்டாளர்களால் … Read more

தலாய்லாமாவின் இலங்கை பயணம் தொடர்பில் வெளியான தகவல்!

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்று இச்செய்தியை பிரசுரித்துள்ளது. கடந்த மாதம் பீகாரின் புத்தகாயாவில் நடைபெற்ற பௌத்த துறவிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினரால் திபெத்திய தலைவர் கொழும்புக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை திபெத்தின் புனிதரை இலங்கை தூதுக்குழுவினர் அழைத்தனர், … Read more

தமிழர் பகுதியில் 71 வயதிலும் சாதனை படைக்கும் சிங்கப் பெண்! (video)

முள்ளியவளையைச் சேர்ந்த 71வயதுடைய பெண்ணொருவர் 5000மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். ஜனவரி 9ஆம் திகதி மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற விளையாட்டில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். குறித்த போட்கெளுக்கான முள்ளியவளை வித்தியானந்தா பரிசளிப்பு விழா இன்று (19.01.2023)  இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பெண் முதலாமிடம் பெற்று மூன்று தங்கபதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். Source link

கருவில் இருந்த சிசுவைக் கூட கொன்ற விடுதலைப் புலியினர்! சரத் வீரசேகரவின் சர்ச்சை கருத்து

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை இன அழிப்பு செயற்பாடு என்று சித்தரிப்பதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், கருவில் இருந்த சிசுவை கூட அழித்தார்கள் இதனை ஏன் சர்வதேசம் மனித உரிமை மீறல் குற்றமாக கருதவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.   நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  … Read more

இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

நாடு முழுவதிலும் நாளாந்தம் 4,700 இ.போ.ச பஸ்கள் சேவையில்

இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் 4 ஆயிரத்து 700 பஸ்களை ,நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடுத்துவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 75 ஆவது சுதந்திர வைபவத்திற்கு அமைவாக மேலும் 1,000 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும். ரயில் சேவை குறைபாடுகளை தீர்ப்பதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கான சிசுசெரிய பஸ் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது;. பேண்தகு போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் … Read more

நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் அறிக்கை வழங்கப்படுமாயின் நடவடிக்கை

நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அறிக்கை வழங்க்கடுமாயின் அதனை நீதி சேவை ஆணைக்குழுவிடம் சமர்பித்து பதிலை பெற்று தருவதாக அமைச்சர் கூறினார். நீதவான் ஒருவர் ஒரு தரப்புக்கு ரூபா 10000 பெறுமதியான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு பணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் நாளையுடன் நிறைவு

2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை நாளை ஆரம்மாகவுள்ளதால் , நாளை (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க  பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.