கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் ஒன்றுகூடிய 3 ஜனாதிபதிகள்

முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்தின் மகனின் திருமண வைபவம் நேற்று முன்தினம் கொழும்பு ஷெங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த விருந்தில் முக்கியஸ்தர்கள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர், பொதுஜன பெரமுன அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் மூன்று ஜனாதிபதிகள் கலந்து கொண்டமை இங்கு காணப்பட்ட மிகவும் விசேட நிகழ்வாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். … Read more

காலநிலை மாற்றத்தை தணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற அனுமதி பத்திரத்துக்கு பதிலாக சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) ஜனாதிபதி … Read more

அந்நியச் செலாவணியின் பிரதான பங்குதாரர்களான கைத்தொழில் துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பிரதான பங்குதாரர்களான தொழில்துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ‘சாதனையாளர் விருது – 2022’ இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை தேசிய கைத்தொழில் … Read more

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் 

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (20) திறக்கப்பட்டுள்ளது. மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக 50 மாணவர்கள் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதோடு தையல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப் பயிற்சி நிலையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வதிவிட பயற்சியினை வழங்கும் நிறுவனமாக தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க … Read more

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி விளையாட்டுத்துறையிலும் தேசிய சாதனைகளை நிலைநாட்டும்

சுமார் 3.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட,தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வலைப்பந்தாட்ட மைதானம் நேற்று (20) பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனால் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட 5 மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். யாழ் மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, … Read more

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர்! சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இதேவேளை,  தினேஷ் ஷாப்டர் பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய நண்பரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கொலைச் … Read more

கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள விசேட பொருளாதார வலையத்திற்கு வீசா

கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச வர்த்தக கடல் நடவடிக்கை மற்றும் நிதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா துறை போன்ற பல்வேறு சேவைகளுக்காக வரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கான வீசா வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரம் விசேட பொருளாதார வலையமாக செயல்படவுள்ளதுடன், சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி … Read more

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடே அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் மெதுவாக இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும்தென்மேற்குவங்காள விரிகுடா ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 … Read more

தீவிரமடையும் வேலைநிறுத்த போராட்டம்! ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக தான் பின்வாங்கப் போவதில்லை என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸுக்கு முன்னதாக நெருக்கடியை தீர்க்குமாறு செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். தீவிரமடையும் போராட்டம்  ஆனால் இருதரப்புக்கும் இடையே முன்னேற்றம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ”ஊதியத்தை அதிகரிப்பதை விட பரவலான இடையூறுகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பணவீக்கத்தைத் தூண்டும் அபாயத்தை தான் ஏற்றுக்கொள்வேன்” என்று பிரதமர்  … Read more

வடக்கு மாகாணம் அசுத்தப்பட்டிருக்கின்றது. அதனை தூய்மையாக்க வேண்டும் – வடக்கு மாகாண பிரதம செயலாளர்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளாரின் தலைமையில் மும்மொழி கற்றல் நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் (19.12.2022) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம செயலாளர் (வடக்கு மாகாணம்) செயலாளர் கல்வி அமைச்சு (வடக்கு மாகாணம்) சிரேஸ்ட உதவிச் செயலாளர்-(கல்வி அமைச்சு), பிரதம (கணக்காளர்-கல்வி அமைச்சு), உதவிச் செயலாளர்-இளைஞர் விவகார அலகு, வலயக் கல்விப் பணிப்பாளர் -யாழ்ப்பாணம், … Read more