உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் பெயர் குறித்த நியமனம் கோருவதற்கான அறிவித்தல்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் பெயர் குறித்த நியமனம் கோருவதற்கான அறிவித்தல் 2022 ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் திணக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கண்டி நகரத்தில் வளிமாசடைவு – முகக்கவசம் அணிவது நோய்களைத் தடுக்கும்

மத்திய மாகாணம் அடங்கலாக நாட்டின் பல பாகங்களில் நிலவும் குளிரான காலநிலைக்குக் காரணம், வளிமண்டலத்தில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (8)  கண்டியில் வளிமண்டல வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் என்ற அளவிற்கு குறைந்திருந்தது. இன்று மாலைக்குப் பின்னர், நிலைமை சீரடைந்து விடலாம் என கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவிற்குப் பொறுப்பான பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். இன்று பகல் எமது நிலையத்திற்குக் கருத்து வெளியிட்டபோது, … Read more

வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் டிசம்பர் 06 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார். இதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ காமினி லொக்குகே, கௌரவ சம்பத் அதுகோரல,      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ (திருமதி) … Read more

“Mandous” புயல் 3 மணி நேரத்தில், மணிக்கு 08 கி.மீ வேகத்தில் நகர்வு – கடல் கொந்தளிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மாண்டஸ்” “Mandous” புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 08 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.தாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இன்று டிசம்பர் 08, 2022 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அட்சரேகைக்கு அருகில் புயல் அமைந்தது. 9.3°N மற்றும் தீர்க்கரேகை 84.4°E, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 560km மற்றும் தமிழகத்தின் சென்னைக்கு தென்கிழக்கே 620 km தொலைவில் புயல் காணப்படுகிறது இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் … Read more

வைத்தியசாலைக்கு வரும் பெண்கள் மறைக்கும் விடயம் தொடர்பில் மருத்துவர் வெளியிட்டுள்ள தகவல்

வீட்டில் கணவன்மாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள், தான் தாக்குதலுக்கு உள்ளானதை மருத்துவரிடம் கூறாது மறைப்பதாக கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையின் மகபேறு மற்றும் நரம்பியல் தொடர்பான சிறப்பு மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹொட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார். கணவனால் தாக்கப்படும் பெண்கள் அதனை கூறவிரும்புவதில்லை இவ்வாறு வைத்தியசாலைக்கு வரும் பெண்களின் 50 வீதமானவர்கள் தம்மை கணவன் தாக்கியதை கூற விரும்புவதில்லை. கணவனால் தாக்கப்பட்டு … Read more

இலங்கை, ஜப்பான் மற்றும் ஐ.நா பெண்கள் அமைப்பின் ஆதரவுடன் பெண்கள், சமாதானம் ……….

இலங்கை, ஜப்பான் மற்றும் ஐ.நா பெண்கள் அமைப்பின் ஆதரவுடன் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது தேசிய செயற்திட்டத்தை பின்பற்றுவதை நோக்கி நகர்கின்றது.  இலங்கைக்கான ஜப்பான் தூதுவரான H.E. மிசுகோஷி ஹிடியாகி, மற்றும் இலங்கையில் உள்ள ஐ.நா பெண்கள் அமைப்பின் தலைவரான ரமாயா சல்காடோ ஆகியோர், பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் முதலாவது தேசிய செயற் திட்டத்தை (WPS) (6 டிசம்பர் 2022 பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரான கௌரவ. கீதா … Read more

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2022 ஒத்தோபர்

ஆடை ஏற்றுமதிகளின் குறைந்தளவிலான வருவாய்களின் காரணமாக வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 மாச்சிலிருந்து முதற்தடவையாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. இறக்குமதிச் செலவினமானது 2022 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருந்தபோதிலும் இறக்குமதிச் செலவினத்தின் வீழ்ச்சி தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக 2022 ஒத்தோபரில் (ஆண்டிற்காண்டு) தொடர்ந்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஒத்தோபரில் குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. அதேவேளை, 2022 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாகக் காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் மேம்பட்டன. … Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்துக்கு அமைய நியமிப்பதற்கான விசேட கூட்டம்

அரசியலமைப்பின் 41அ(1)(ஊ) யாப்பின் பிரகாரம் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கம் வகிக்கும் அரசியற்கட்சி அல்லது சுயேட்சைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்துக்கு அமைய நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 08 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை 01 இல் இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசிலமைப்புப் பேரவையின் உறுப்பினராக உரிய உறுப்பினரொருவரை நியமிப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய … Read more

வெளிநாட்டு தூதுவர்களுடன் ,அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்துள்ளார். கொழும்பில் (06) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.