நெருக்கடியிலிருந்து மீள இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு!

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க … Read more

மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு : 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

மத்திய மலையக பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ,திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில்   பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சமையலறையில் இருந்த 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்திருப்பதாக திம்புள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர். மலையக பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருக்கோனேஸ்வர ஆலயத்தில் இந்திய தூதுவர் வழிபாடு

திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்றைய தினம் (02) வழிபாடுகளில் ஈடுபட்டார். நவராத்திரி விரதமும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமும் ஒருங்கே அமையப்பெற்ற இன்றைய நன்னாளில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்தலமான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற காலைப்பூஜை மற்றும் வழிபாடுகளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார். இலங்கை -இந்திய மக்களின் செழுமை, அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அவர் பிரார்த்தித்தமை குறிப்பிடத்தக்கது. அமைதிநிறைந்த கடலோரத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு இச்சிவாலயத்தின் வரலாறு குறித்து … Read more

இலங்கையில் ஐந்து இடங்களில், இவ்வருடத்துக்கான காந்தி ஜெயந்தி

இலங்கையிலுள்ள ஐந்து வெவ்வேறு இடங்களில் இவ்வருடத்துக்கான காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற உயர் ஸ்தானிகர் இக்கொண்டாட்டங்களுக்கு தலைமைவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேல் மாகாணத்திற்கான கொண்டாட்டங்கள் கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றிருந்தன. யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்கள் மற்றும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை முறையே நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இந்நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பணவீக்கம் 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்தைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 64.3 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஓகத்தின் 93.7 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 94.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 50.2 … Read more

இலங்கையின் மோசமான நிலைக்கான பிரதான நபர்களை அம்பலப்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கையிலுள்ள தொழில் வல்லுநர்கள் முறையான முறையில் வரி செலுத்தியிருந்தால், இலங்கையின் பொருளாதாரத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணம் இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவிடப்படுகிறது.  ஆனால், ஒரு வைத்தியர் தனது தொழிலில் குறைவான வரியை செலுத்துவதாகவும் … Read more

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள்: உள்ளூர் வர்த்தகர்கள் விசனம்

உள்ளூர் வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிய 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொள்கலன்களில் உணவுப் பொருட்கள்,அழகுசாதனப் பொருட்கள், விழாக்களில் பயன்படுத்தப்படும் செயற்கை மாலைகள் ,மஞ்சள் மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வர்த்தகர்கள் விசனம் இந்தநிலையில் பொருட்கள் கப்பலில் இருந்து இறக்கப்படாமையால், கோயில் விழாக்களின் போது, தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செயற்கை மாலை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கொள்கலன்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளின் … Read more