இலங்கையில் (26.09.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இலங்கையில் (26.09.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் (26.09.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
அமெரிக்க டொலருக்கு நிகராக பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண் 1.6 டொலர் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த பெறுமதி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியமையே பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுணின் பெறுமதி குறைவடைவதற்கான காரணமாகும். இதற்கு முன்னர் ஆசிய சந்தையில், ஸ்டேர்லிங் பவுணின் பெறுமதி 4% குறைந்து 1.3 டொலராக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் இலங்கையர்கள், தனது நாட்டிற்கு பொருட்களை அனுப்பும் போது, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றினூடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், இவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்கள் அனுப்புவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. பொருட்கள், பயணப்பொதிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என்பவற்றை இலங்கைக்கு அனுப்பும்போது, அவை காணாமல் போகின்றன மற்றும் சேதமடைகின்றன என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை … Read more
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர வேண்டாம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆஜராகி இருந்தார். தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால்,அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என ஆட்சேபனையை முன்வைத்துள்ளார். மேலும் இத் தாக்குதல் தொடர்பாக பிரதிவாதியாக குறிப்பிட்ட ரணில் … Read more
வாரியபொல கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை விசர் நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி விசர்நாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டு நாயையும் கடித்துள்ளது. அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடி தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது … Read more
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 முதல் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘மனுசவி’ என்ற ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பயனடைவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலிலுக்காக சென்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மன்னார், ஜோசப் வாஸ் நகர் பிரதேசத்தில் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக இருக்கும் காணியை குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடற்றொழில் சங்கத்திற்கு வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த காணி உத்தியோகபூர்வமாக நேற்று (25) ஜோசப் வாஸ் நகர் கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம் காரணமாக விடத்தல்தீவில் இருந்து 1990 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் தீவில் ஜோசப் நகர் எனும் இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். எனினும், குறித்த … Read more
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆவது ரி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் ரி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ரி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் … Read more
தற்பொழுது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மீள் ஆய்வு செய்து அதனை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து அல்லது சில பகுதிகளை நீக்குவதா? என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று பதில் பாதுகாப்பு அமைச்சரும், இராஜாங்க அமைச்சருமான பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொதுமக்களால் வழமைபோன்று செய்றபடுவதற்கு இடமுண்டு என்றும் குறிப்பிட்டார். அரச பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (26) நடைபெற்ற … Read more